May 18, 2024

Seithi Saral

Tamil News Channel

மூன்றாவது அலையில் இறந்தவர்களில் 60 சதவீதம் பேர் தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள்

1 min read

About 60 percent of those who die in the third wave are unvaccinated

23.1.2022-

கொரோனா மூன்றாவது அலையில் 60 சதவீத இறப்புகள், தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள் என்ற ஒரு ஆய்வுத்தகவல் வெளியாகி உள்ளது.

கொரோனா 3-வது அலை

நாடு கொரோனா தொற்றின் 3-வது அலையை எதிர்த்து போராடி வருகிறது. இந்த அலையில் ஆஸ்பத்திரி சேர்க்கைகள், இறப்புகள் குறைவாகவே இருக்கின்றன. இந்த அலை தொடர்பாக டெல்லி மேக்ஸ் ஹெல்த்கேர் ஆஸ்பத்திரி ஒரு ஆய்வு நடத்தியது. கடந்த 20-ந்தேதி வரையில் நடத்தப்பட்ட ஆய்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது.

அதில் இடம் பெற்றுள்ள முக்கிய தகவல்கள் வருமாறு:-

60 சதவீதம் பேர்

  • கொரோனா மூன்றாவது அலையில் நிகழ்ந்துள்ள இறப்புகளில் 60 சதவீதத்தினர் தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்களும், இரண்டாவது டோஸ் போட்டுக்கொள்ளாதவர்களும்தான்.
  • இறந்தவர்களில் 70 சதவீதத்துக்கும் மேற்பட்டவர்கள் சிறுநீரக நோய்கள், இதய நோய்கள், நீரிழிவு, புற்றுநோய் உள்ளிட்ட இணை நோயுடன் போராடி வந்தவர்கள் ஆவார்கள்.

சிறுவர், சிறுமியர் இறப்பு இல்லை…

  • எங்கள் ஆஸ்பத்திரியில் 82 பேர் இறந்துள்ளனர். 60 சதவீதம் பேர் தடுப்பூசி போடாதவர்கள் அல்லது முழுமையாக போடாதவர்கள் ஆவார்கள்.
  • 41 சிறுவர், சிறுமியர் ஆஸ்பத்திரியில் கொரோனா மீட்பு சிகிச்சைக்கு சேர்ந்தனனர். இந்த பிரிவில் இறப்பு இல்லை. 7 பேர் மட்டுமே தீவிர சிகிச்சை பிரிவிலும், 2 பேர் வென்டிலேட்டர் வசதியுடனும் சிகிச்சை பெற்றனர்.
  • முதல் அலையில் இறப்பு விகிதம் 7.2 சதவீதம், இரண்டாவது அலையில் 10.5 சதவீதம். மூன்றாவது அலையில் 6 சதவீதம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கொரோனாவின் மூன்றாவது அலையில் இறப்புகள், தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்களுக்கும், இணைநோய்களுடன் போராடியவர்களுக்கும் நேர்ந்து இருப்பதை டெல்லி சுகாதார மந்திரி சத்யேந்தர் ஜெயினும் ஏற்கனவே குறிப்பிட்டது நினைவுகூரத்தக்கது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.