May 18, 2024

Seithi Saral

Tamil News Channel

“நான் ஏன் காந்தியை கொன்றேன்?” என்ற படம் மராட்டியத்தில் வெளியாக அனுமதி கூடாது; நானா படோலே கோரிக்கை

1 min read

“Why did I kill Gandhi?” The film should not be allowed to be released in Marathi; Request by Nana Patole

23/1/2022
“நான் ஏன் காந்தியை கொன்றேன்?” என்ற படம் மராட்டியத்தில் வெளியாக அனுமதிக்க கூடாது என்று நானா படோலே கோரிக்கை விடுத்துள்ளார்.

கோட்சே

மகாத்மா காந்தி 1948 ஆம் ஆண்டு நாதுராம் கோட்சே என்பவரால் சுட்டு கொல்லப்பட்டார். கோட்சேவின் வாக்குமூலத்தை மூலமாக கொண்டு “நான் ஏன் காந்தியை கொன்றேன்” என்ற படம் தயாராகி உள்ளது.

இத்திரைப்படத்தை பிரபல இயக்குனர் அசோக் தியாகி இயக்கியுள்ளார். அமோல் கோல்ஹே நாதுராம் கோட்சேவாக நடித்துள்ளார். கல்யாணி சிங் இந்த படத்தை தயாரித்துள்ளார். படம் ஜனவரி 30 ஆம் தேதி வெளியாகிறது.

வெளியிடக்கூடாது

இந்த திரைப்படத்திற்கு பலத்த எதிர்ப்பு வலுத்து வரும் நிலையில் அந்த படத்தை மராட்டியத்தில் வெளியிட அனுமதிக்கக் கூடாது என காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நானா படோலே கோரிக்கை விடுத்துள்ளார்.

காந்திஜியின் கொலைகாரனை ஹீரோவாக சித்தரித்தால், அதை ஏற்க முடியாது எனவும் காந்தி மற்றும் அவரது சித்தாந்தத்தின் மூலம் நம் நாடு அறியப்படுகிறது. அவர் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறார் எனவும் அவர் கூறியுள்ளார்.

காங்கிரஸ் அதனை எதிர்க்கும். இந்தப் படத்தை மராட்டியத்தில் வெளியிட அனுமதிக்கக் கூடாது என முதல்-மந்திரியிடம் கோரிக்கை விடுக்க உள்ளதாக நானா படோலே செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.