சேலைக்குள் கண்ணாயிரம்/ நகைச்சுவை கதை
1 min read
Kanaayiram in Saree/ Story by Tahabasukumar
23.1.2022
கண்ணாயிரம் வடநாட்டில் காணாமல் போன கழுதைகளை கண்டுபிடிக்க இந்தி தெரிந்தால் நல்லாயிருக்கும் என்று நினைத்தவர்..ஒருவருடன் கடைக்கு சென்று இந்தி கற்றுக்கொள்வது எப்படி என்ற புத்தகத்தை வாங்கிக்கொண்டு வீட்டுக்கு புறப்பட்டார்.
வரும்வழியில் நண்பருடன் பேசிக்கொண்டே வந்தார்.என்ன கண்ணாயிரம் இந்தி புக்கா..என்று நண்பர் கேட்டார்.கண்ணாயிரம் உடனே..ம்…இது கண்ணாயிரம்
புக்கு..விலை கொடுத்து வாங்கியாச்சு….என்றார்.சரிப்பா..ஆனா..இந்த புக்கு இந்தியிலேதான..இருக்கும்..அதான்..அப்படி..சொன்னேன்…என்றார். நண்பர்.கண்ணாயிரம், ம்..அப்படி..இல்லை..இந்தி இருக்கும்..தமிழும்..இருக்கும்.தமிழ் இல்லாம வாங்குவனா…என்று சொன்னார்.சரி,இந்தி புக்கு இப்பம் எதுக்கு..என்று கேட்டார் நண்பர்.அதுவா..இந்தி படிக்க..வேறு எதுக்கு என்றார் கண்ணாயிரம்.நண்பர் உடனே இந்தி ஏன்படிக்கணும் என்றார்.கண்ணாயிரம்,அதுவா சும்மாதான்..நேரம் போகுணுமில்ல..என்று சொல்லி சமாளித்தார்.நண்பர் நம்பாமல்.கண்ணாயிரம் விசியம் இல்லாமல் நீ இந்தி படிக்க மாட்டியே..சொல்லு என்றார்.கண்ணாயிரம்..அது ரகசியம் அப்பா நீசொன்னா எல்லோரிடமும் சொல்லிப்புடுவ..வேண்டாம்பா..என்று நழுவினார்.
நண்பர்..சரி,சரி புக்கு எவ்வளவு ?
அதையாவது சொல்லு என்றார்.நூறு ரூபா புக்கு குறைச்சு 95ரூபாய்க்கு வாங்கி இருக்கேன் என்றார் கண்ணாயிரம்.அதை கேட்டதும்..தப்பு பண்ணிட்டியள கண்ணாயிரம்.பழைய பத்தக கடைக்கு போனா இருபது ரூபாய்க்கு வாங்கி இருக்கலாம்..மோட்டார் சைக்கிள்வாலிபர்.அப்படிதான் பழைய புத்தகம் விக்கிறான் என்றார் நண்பர்.உடனே கண்ணாயிரம், ம்.மோட்டார்சைக்கிள்வாலிபர் என்கூட சண்டை. அவன்கடைக்கு போகமாட்டேன்.அவனை பத்தி பேசாதீங்க என்று கோபமாக சொன்னார்.சரிப்பா..அவனைபத்தி கேட்கல.விடு என்று சொன்னார் நண்பர்.கண்ணாயிரம்..சரி.வீடுவந்துட்டு.அந்த ரவுடி பினாயிலிலே வந்தா சொல்லுங்க..நன்றி என்று சொல்லிவிட்டு வீட்டுக்குள் சென்றார்.
கண்ணாயிரம் நேராக மனைவியிடம் சென்று புத்தகத்தை கொடுத்தார்.பூங்கொடி வாங்கி புத்தகத்தை பிரித்து பார்த்தார்.என்னங்க..புக்கு நூறு ரூபாயா..இருபது ரூபாய்க்கு புக்கு இல்லையா..நான் சமையல் கற்றுக்கொள்வது எப்படிங்கிற புத்தகத்தை இருபது ரூபாய்க்குதானே வாங்கினன்..இப்படி நூறு ரூபாயை தொலைச்சிட்டு வந்திருக்கீங்க..உங்களுக்கு ஒரு அறிவும் கிடையாது .நாலுகடை பார்த்து குறைந்த விலையிலே வாங்கி யிருக்கலாமுல்ல..உங்கள என்ன சொல்ல..எல்லாம் என் தலை எழுத்து..போய் இந்த புக்கை கொடுத்துட்டு ரூபாயை வாங்கிட்டு வாங்க என்று சத்தம் போட்டார்.
கண்ணாயிரம்..உடனே, பூங்கொடி. நான் விலையை குறைச்சுதான் புக்வாங்கினேன்.நல்ல பேப்பர்,பெரிய எழுத்து ,எளிமையா படிக்கலாம்..நீ கவலை படாதே..வடநாட்டில் காணாம போன கழுதையை கண்டுபிடிச்சிட்டா..அதிக பணம் கிடைக்குமல்ல..அதை நீ நினைக்க மாட்டேங்கிற..இது நல்ல புக்..நாம வச்சுக்குவம்.. என்றார்.பூங்கொடிக்கு விருப்பம் இல்லை.ஏங்க.நான் சொல்லுறதை கேட்கமாட்டிங்களா..போய் உடனே இந்த புக்கை கொடுத்துட்டு ரூபாயை வாங்குங்க .இன்னும் நாலு கடை அலைஞ்சுபாருங்க..இருபது ரூபாயுக்கு இந்தி புக் வாங்கிட்டு வாங்க…என்றார்
. கண்ணாயிரம்..மெல்ல.வித்த புக்க திருப்பி வாங்கமாட்டாங்க..என்றார்.உடனே..பூங்கொடி.ஏங்க உங்களுக்கு திறமை காணாது..கொடுங்க அந்த புக்கை..நான் போய் அந்த புக்கை கொடுத்துட்டு ரூபாய்வாங்கிட்டு வர்ரேன் என்றார்.கண்ணாயிரம் புக்கை எடுத்து கொடுத்தார். பூங்கொடி அந்த புக்கை எடுத்து கொண்டு ஆவேசமாக புறப்பட்டார்.கண்ணாயிரம் என்ன ஆகுமோ என்ற பயத்தில் இருந்தார். கடையை பூங்கொடி நெருங்கினார்.
கடைக்காரரைபார்த்து என்னங்க புக்கு..என் வீட்டுக்காரரை ஏமாத்தி நூறு ரூபாய்க்கு இந்த புத்தகத்தை தலையிலே கட்டிவிட்டீங்களா..இந்த புக்கை வச்சிக்கிட்டு நூறு ரூபாய் கொடுங்க என்றார்.கடைக்காரர் உடனே..புக்கு வித்தபிறகு மாத்த மாட்டோம்..வித்தா வித்ததுதான் என்றார்.பூங்கொடி கோபத்தில்..ஏங்க. .என்ன வியாபாரம் பாக்கிறீங்க..நகை கடைல..புது மாடல் நகை வேணுமுன்னா மாத்தி தர்ராங்க..ஜவுளிக்கடைல..கலர்பிடிக்கலன்னா மாத்தி கொடுக்காங்க..நீங்க புத்தகத்தை வாங்கிட்டு பணம் தரமாட்டீங்களா..என்று கேட்டார். கடைக்காரர் உடனே..நகைகடையிலும் ஜவுளிக்கடையிலும் வாங்கிய பொருளை கொடுத்துட்டு வேறு பொருள் வாங்கிட்டு வர்ரீங்க..அதேமாதிரி இந்த புக்கை கொடுத்துட்டு..வேறு புத்தகம் வாங்குங்க. என்று சொன்னார்.பூங்கொடி ,அப்படியா..எனக்கு இருபது ரூபாய்க்கு இந்தியில்படிப்பது எப்படி என்ற புத்தகத்தை கொடுங்க என்றார்.கடைக்காரர்..இருபது ரூபாய்க்கு.புத்தகம் வேணுமா..கொஞ்சம் இருங்க..நாலுகடைதாண்டி எங்களுக்கு இன்னொருகடை இருக்கு அங்க வாங்கி தர்ரேன்..என்றார்.கடையிலே இருந்த பையனிடம்..டேய் தம்பி.. நம்ம கடைக்கு போயி..இருபது ரூபாய்க்கு இந்திபடிப்பது எப்படி என்ற புத்தகம் வாங்கிட்டுவா என்று கூறினார்.
கடைபையன் கட,கட என்று ஓடி அந்த புத்தகத்தை வாங்கி வந்து கொடுத்தான்.கடைக்காரர் அந்த புத்தகத்தை வாங்கி பூங்கொடியிடம் கொடுத்தார்.மீதி சில்லறை 75ரூபாயை பூங்கொடியிடம் நீட்டினார்.பூங்கொடி அதை பார்த்துவிட்டு..80ரூபாயில்லோ தரணும் என்றார்.கடைக்காரர் மெல்ல..டிஸ்கவுண்டு போக.95ரூபாய்க்கு தான் புத்தகத்தை வித்தேன் என்று சொன்னார். அப்படியா..என்று சொன்ன பூங்கொடி அந்த தொகையை வாங்கிக்கொண்டு புறப்பட்டார்.இருபது ரூபாய்க்கு புக் வாங்கிய மகிழ்ச்சி அவருக்கு..கடை வீதியில் நடந்த அவர்..நேராக..ஒவ்வொரு கடையா சென்று குறைந்த விலையில் எதாவது கிடைக்கிறதா என்று பார்த்தார்.இரு நூறு ரூபா சேலை நூறு ரூபாய்..இரு நூறு ரூபாய் சேலை நூறு ரூபாய் என்று ஒருவர் விற்றுக்கொண்டிருந்தார்.பூங்கொடி அவரிடம்..சாயம் போகுமா..என்று கேட்டார்.
அவர் சாயம் போகாது. சுத்தமான சேலை.வாங்குங்க..போனா வராது .பொழுது போனா கிடைக்காது..நாலே நாலு சேலைதான் இருக்கு..சீக்கிரம்..என்றார்.பூங்கொடி அவரிடம் குறைச்சு கொடுங்க.. என்று கேட்டார்.அவர் ஏற்கனவே குறைச்சுதான் சொல்லுறன்..இதுக்கு மேல குறைக்கமுடியாது..என்றார். பூங்கொடி..ஏங்க..இது பழைய மாடல் சேலை..எத்தனையோ டிசைன்,டிசைனா சேலை வந்திட்டு..உங்ககிட்ட ஒரு சேலைவாங்கலாமுன்னு கேட்கிறேன்..குறைச்சு தரமாட்டிக்கீங்கள..நான் போறன்.என்றார்.அவர் ஏம்மா..கோபப்படுற..தொண்ணுறு ரூபா வாங்கிக்கிங்க என்றார். பூங்கொடியிட.ம்..எழுபத்து ஐந்து ரூபா . இஸ்டம் இருந்தா கொடுங்க..இல்லைன்னா..வேண்டாம்..என்றார்.அவரும் ..விரும்பி கேட்கிறீங்க..ரூபாயை எடுங்க. .என்றார்.பூங்கொடி எழுபத்து ஐந்து ரூபாய் எடுத்து கொடுத்தார்.அவர் ஒரு பேப்பரில் சேலையை மடக்கி கொடுக்க பூங்கொடி சேலையை வாங்கி கொண்டு வெற்றி புன்னகையுடன் புறப்பட்டார்.
கண்ணாயிரம் என்ன ஆயிற்றோ என்ற பதட்டத்தில் இருந்தபோது..பூங்கொடி வீட்டுக்குள் நுழைந்தார்.கண்ணாயிரத்தை பார்த்து..ஏங்க..இருபது ரூபாய்க்கு விற்ற இந்தி புக்கை பாருங்க..என்று தான் வாங்கிவந்த புத்தகத்தை நீட்டினார்.கண்ணாயிரம்..அதை வாங்கி பார்த்துவிட்டு. இதை எந்த கடையிலே வாங்கின..என்று கேட்டார்.நீங்க வாங்கின அதே கடையிலேதான்..இதையும்.வாங்கினேன்..எதுக்கும் வாய்சாமார்த்தியம் வேணுங்க..இதோபாருங்க.நூறு ரூபா சேலையை..பேசி குறைச்சு..எழுபத்திஐந்து ரூபாய்க்கு வாங்கியிருக்கேன் என்று தன் திறமையை சொன்னார்.கண்ணாயிரம் உடனே..ரோட்டோரம் விக்கிறவனிடம் வாங்கினியா..சாயம் போகும். என்றார்.பூங்கொடி பதிலுக்கு..ஏங்க நான் உங்களமாதிரி ஏமாளியா..சாயம் போகுமா என்று கேட்டுதான் வாங்கினேன்..சாயம் போகாதுன்னு அடிச்சு சொன்னாரு..என்றார்.கண்ணாயிரம்..ஏய் அப்படி சொல்லித்தான் விப்பாங்க.கண்டிப்பா சாயம் போகும் என்று சொன்னார்.பூங்கொடி..சாயம் போகாது என்றார்.கண்ணாயிரம்..நமக்குள் எதுக்கு சண்டை..பேசாம தண்ணியிலே நனைச்சு பாத்திடுவோம் என்றார்.பூங்கொடியும்..சரி பாப்போம் என்று சொல்லிவிட்டு..வாளியில் இருந்த தண்ணிக்குள் சேலையை முக்கினார்.சாயம் போகவில்லை.பாத்தியளா..சாயம் போகவில்லை..என்றார். கண்ணாயிரத்துக்கு தோல்வியை ஒத்துக்கொள்ளமுடியவில்லை.பூங்கொடி சேலையை தண்ணியிலே முக்கி பிழிஞ்சுபாப்போம்.சாயம்போகலன்னா..ஏத்துக்கிறேன் என்றார்.பூங்கொடி..அதெல்லாம் சாயம் போகாதுங்க..வேணுமுன்னா சேலையிலே ஒருமுனையை நீங்க பிடிங்க..மறு முனையை நான் பிடிக்கிறேன்..பிழிஞ்சு பாப்போம். என்றார்.கண்ணாயிரமும் சரி என்றார். இருவரும் சேலையை தண்ணீரில் முக்கி பிழிந்தார்கள்.சாயம் போகவில்லை.பூங்கொடி பாத்தீங்களா..சாயம் போகாது..நான்பாத்து வாங்கின சேலையாச்சே..என்றார்.சரி,சேலையை உதறி காயப்போடு என்று சொன்னார் கண்ணாயிரம்.பூங்கொடி உடனே..சேலையை உதறி கயிற்றில் காயப்போடமுயன்றார்.சேலையின் நடுவில் ஏற்பட்ட சின்ன கிழிசல் வழியாக கண்ணாயிரம் தெரிந்தார்.பூங்கொடி அய்யோ என்று கத்தினார்.
-வே.தபசுக்குமார்.புதுவை.