May 5, 2024

Seithi Saral

Tamil News Channel

நடிகர் விஜய்யின் சொகுசு கார் வழக்கில் உயர்நீதிமன்றம் புதிய உத்தரவு

1 min read

High court issues new order in actor Vijay’s luxury car case

28.1.2022
நடிகர் விஜய்யின் சொகுசு கார் வழக்கில் உயர்நீதிமன்றம் புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.

நடிகர் விஜய்

அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்த சொகுசு காருக்கு அபராதம் செலுத்துவதை சென்னை உயர்நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது. எந்த அடிப்படையில் அபராதம் விதிக்கப்பட்டது என்பது குறித்து ஆவணங்களை தாக்கல் செய்யும்படி தமிழ்நாடு அரசிற்கு உத்தரவிட்டு வழக்கை வருகிற 1-ந் தேதிக்கு ஒத்திவைத்தனர். அதுவரை அபராதம் செலுத்த வேண்டாம் என தெரிவித்துள்ளது.

சொகுசு கார்

நடிகர் விஜய் வெளிநாட்டில் இருந்து ரூ.63 லட்சம் மதிப்புள்ள சொகுசு கார் இறக்குமதி செய்தார். இதற்கு முதலில் நுழைவு வரி செலுத்த மறுப்பு தெரிவித்த விஜய் பின்னர் ரூ.7.98 லட்சம் வரி செலுத்தினார். இந்த கால தாமதத்திற்காக 400 சதவீதம் அபராதம் விதித்து ரூ.30.23 லட்சம் செலுத்த உத்தரவிட்டது. இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் விஜய் வழக்கு தொடர்ந்திருந்தார்.
அதாவது, நுழைவுவரி தொடர்பான வழக்கு நிலுவையில் இருந்ததால், வரி செலுத்த காலதாமானது என்றும் அபராதத்தொகையை ரத்துசெய்யவேண்டும் என்றும் உயர்நீதிமன்றத்தில் கூறியிருந்தார். மேலும் அபராதம் தொடர்பான நடவடிக்கைகளுக்கு இடைக்காலத்தடை விதிக்கவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, வழக்கினை செவ்வாய்க்கிழமைக்கு ஒத்திவைத்தார். அபராதத்தை வசூலிப்பது தொடர்பான எவ்வித கடுமையான நடவடிக்கையும் மேற்கொள்ளவேண்டாம் என்றும் தமிழ்நாடு அரசுக்கு சென்னை நீதிமன்றம் உத்தரவிட்டது.

மேலும், இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் மற்றும் அடையார் கேட் ஓட்டல்களின் இதே போன்ற பிற வழக்குகளுடன் இந்த வழக்கையும் சேர்த்து விசாரிப்பதாக உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.