May 7, 2024

Seithi Saral

Tamil News Channel

2023ஆம் நிதியாண்டில் பொருளாதாரம் 8.5 சதவீதம் வரை வளர்ச்சி அடையும்; ஆய்வறிக்கையில் தகவல்

1 min read

The economy is expected to grow by 8.5 percent in fiscal 2023; Information in the dissertation

31.1.2022
நாட்டின் பொருளாதாரம் 2023ஆம் நிதியாண்டில் 8 முதல் 8.5 சதவீதம் வரையில் வளர்ச்சி அடையும் என பொருளாதார ஆய்வறிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

பொருளாதார ஆய்வறிக்கை

இந்திய நாடாளுமன்றம் பொதுவாக ஆண்டுக்கு 3 முறை கூடுகிறது. பட்ஜெட் கூட்டத்தொடர், மழைக்கால கூட்டத்தொடர் மற்றும் குளிர்கால கூட்டத்தொடர் என 3 முறை நடைபெறும் இந்த கூட்டங்களில் நல்லாட்சியை உறுதி செய்வதற்கான சட்டமியற்றல், நாட்டுக்கான வளர்ச்சி திட்டங்கள், நிதி ஒதுக்கீடுகள் என பல்வேறு பணிகள் நடைபெறுகின்றன.

இதில் ஆண்டின் முதல் கூட்டமான பட்ஜெட் கூட்டத்தொடர் 2 கட்டங்களாக நடைபெறுகிறது. ஜனாதிபதி உரையுடன் தொடங்கும் இந்த கூட்டத்தில், மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.

2022-23 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் நாளை தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் இன்று தொடங்கிய பட்ஜெட் கூட்டத்தொடரில் மத்திய நிதியமைச்சர் பொருளாதார ஆய்வறிக்கையை தாக்கல் செய்தார்.

8.5 சதவீதம் வளர்ச்சி

இன்று தாக்கல் செய்யப்பட்டு உள்ள பொருளாதார ஆய்வறிக்கையில் நாட்டின் பொருளாதாரம் 2023ஆம் நிதியாண்டில் 8 முதல் 8.5 சதவீதம் வரையில் வளர்ச்சி அடையும் என அதில் கூறப்பட்டு உள்ளது.

இதேபோல் 2021-22ஆம் நிதியாண்டில் நாட்டின் பொருளாதாரம் 9.2 சதவீதம் வரையில் வளர்ச்சி அடையும் என மத்திய அரசு தனது பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது. ஆனால் ஐஎம்எப் வெளியிட்ட கணிப்பில் இந்தியாவின் பொருளாதாரம் 9 சதவீதம் மட்டுமே வளர்ச்சி அடையும் என தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்று பாதிப்புகள் விவசாய துறையைப் பெரிய அளவில் பாதிக்காத நிலையில், 2021-22ஆம் நிதியாண்டில் விவசாயம் மற்றும் அதைச் சார்ந்த துறை சுமார் 3.9 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்யும் என தெரிவிக்கப்ப்ட்டு உள்ளது. கடந்த ஆண்டு இதன் அளவு 3.6 சதவீதமாக இருந்தது.

கொரோனா தொற்றில் இருந்து இந்திய வர்த்தக சந்தை மீண்டு வரும் நிலையில், ஒமைக்ரான் நாட்டின் வளர்ச்சியிலும், வர்த்தகத்திலும் பெரிய அளவிலான பாதிப்பு ஏற்படுத்தாத நிலையில், 2021-22ஆம் நிதியாண்டில் நாட்டின் தொழிற்துறை வளர்ச்சி 11.8 சதவீதமாக இருக்கும் எனப் பொருளாதார ஆய்வறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

இந்தியாவின் சேவைத் துறை 2021-22ஆம் நிதியாண்டில் 8.2 சதவீதம் வளர்ச்சி அடையும் எனவும், மேக்ரோ எகோ இண்டிகேட்டர்ஸ் 2022-23ஆம் நிதியாண்டில் சவால்களை எதிர்கொள்ளத் தயாராக உள்ளது எனவும் பொருளாதார ஆய்வறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.