May 7, 2024

Seithi Saral

Tamil News Channel

நகர்புற உள்ளாட்சி தேர்தலில் பாஜக தனித்துப்போட்டி அண்ணாமலை அறிவிப்பு

1 min read

Annamalai announces BJP’s stand-alone contest in urban local body elections

31.1.2022
நகர்புற உள்ளாட்சி தேர்தலில் பாஜக தனித்துப்போட்டியிடும் என அக்கட்ட்சியின் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

உள்ளாட்சி தேர்தல்

தமிழ்நாட்டில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் பிப்ரவரி 19-ம் தேதி ஒரேகட்டமாக நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் பிப்ரவரி 22-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.

இதனிடையே, நகர்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக – பாஜக இடையேயான கூட்டணி பேச்சுவார்த்தையில் தொடர்ந்து இழுபறி நீடித்து வந்தது. இடப்பங்கீடு தொடர்பாக அதிமுக – பாஜக இடையே இழுபறி நீடித்து வந்தது.

ஒட்டுமொத்தமாக 25 சதவீத இடங்கள் வரை பாஜக எதிர்பார்ப்பததாகவும், ஆனால், பாஜகவுக்கு 4 முதல் 5 சதவீத இடங்களை மட்டுமே அதிமுக ஒதுக்க வாய்ப்பு இருந்ததாகவும் தகவல் வெளியானது. இதனால், கூட்டணி இடையே தொடர்ந்து இழுபறி நீடித்து வந்தது.

தனித்துப்போட்டி

இந்நிலையில், நகர்புற உள்ளாட்சி தேர்தலில் பாஜக தனித்துப்போட்டியிடும் என அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

நகர்புற உள்ளாட்சி தேர்தலில் பாஜக தனித்து போட்டியிடும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டதால் அதிமுக-பாஜக கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.