குலாம் நபி ஆசாத்தின் தம்பி மகன் பா.ஜ.க.வில் இணைந்தார்
1 min readGhulam Nabi Azad’s nephew joined the BJP
28.2.2022
காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் தம்பி மகன் பா.ஜக.வில் சேர்ந்தார்.
குலாம்நபி ஆசாத்
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத்தின் தம்பி லியாகத் அலி.இவரது மகன் முபாஷிர் ஆசாத், ஜம்மு – காஷ்மீர் பா.ஜ., தலைவர் ரவீந்தர் ரைனா முன்னிலையில், இன்று (பிப்.28) பா.ஜ.,வில் இணைந்தார். பின், முபாஷிர் நிருபர்களிடம் கூறியதாவது:-
காங்கிரஸ் கட்சி என் பெரியப்பாவை அவமரியாதை செய்கிறது. நான் பா.ஜக.வில் சேரப் போவது குறித்து அவரிடம் ஆலோசிக்கவில்லை.
நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் மோடி செய்து வரும் பணிகளால் கவரப்பட்டேன். காங்., கட்சி கோஷ்டிப் பூசலில் சிக்கித் தவிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.
காங்கிரஸ் கட்சியின் நிர்வாக அமைப்பை மாற்றி அமைக்க வேண்டும் என, சோனியாவுக்கு, 2020ல் அனுப்பப்பட்ட கடிதத்தில் கையெழுத்திட்டு இருந்த மூத்த தலைவர்களில், குலாம் நபி ஆசாத்தும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.