மு.க.ஸ்டாலினின் சுயதரிதை புத்தகம் “உங்களின் ஒருவன்”- ராகுல் வெளியி்ட்டார்
1 min readMK Stalin’s autobiography “One of You” – Published by Rahul
28/2/022
மு.க.ஸ்டாலினின் சுயதரிதை புத்தகம் “உங்களின் ஒருவன்”- ராகுல் வெளியி்ட்டார்.
மு.க.ஸ்டாலின் சுயசரிதை
தமிழ்நாசு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது பள்ளி-கல்லூரி படிப்பு, இளமை காலம் முதல் அரசியலில் கடந்து வந்த நிகழ்வுகள், பொதுக்கூட்ட பேச்சுகள், திரையுலகில் கால்தடம் பதித்தது, திருமண வாழ்க்கை, மிசா காலத்தில் அனுபவித்த கொடுமைகள் என அவரது 1976-ம் ஆண்டு வரையிலான 23 ஆண்டு கால வாழ்க்கை பயண வரலாற்று சுவட்டை “உங்களின் ஒருவன்” என்ற தலைப்பில் புத்தகமாக சுயசரிதை எழுதியுள்ளார்.
இந்த புத்தகத்தின் முதல் பாகம் வெளியீட்டு விழா சென்னையில் இன்று (திங்கட்கிழமை) மாலை நடைபெற்றது. நந்தம்பாக்கம் வர்த்தக மைய கூட்டரங்கில் மாலை 3.30 மணியளவில் நடைபெற்ற இந்த விழாவில் அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி. பங்கேற்று “உங்களில் ஒருவன்” புத்தகத்தை வெளியிட்டு சிறப்புரையாற்றினார்.
விழாவில் பங்கேற்பதற்காக ராகுல்காந்தி நேற்று பகல் 12 மணியளவில் டெல்லியில் இருந்து புறப்பட்டு சென்னை வந்தார். விமான நிலையத்தில் அவருக்கு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
ராகுல் காந்தி
வரவேற்பை பெற்றுக்கொண்ட ராகுல்காந்தி கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தங்கி சிறிது நேரம் ஓய்வு எடுத்தார். பின்னர் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் எழுதிய “உங்களில் ஒருவன்” புத்தக வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக மதியம் 3.15 மணியளவில் ஓட்டலில் இருந்து புறப்பட்டு நந்தம்பாக்கம் வர்த்தக மையம் சென்றார்.
அங்கு மு.க.ஸ்டாலின் எழுதிய புத்தகத்தை வெளியிட்டு சிறப்புரையாற்றினார்.
இந்த நிகழ்ச்சிக்கு தி.மு.க. பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் தலைமை தாங்கினார். தி.மு.க. பொருளாளர் டி.ஆர். பாலு முன்னிலை வகித்தார். தி.மு.க. மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்.பி. வரவேற்புரை நிகழ்த்தினார்.
பினராயி விஜயன்
விழாவில் கேரள மாநில முதல்-மந்திரி பினராயி விஜயன், ஜம்மு காஷ்மீர் மாநில முன்னாள் முதல்-மந்திரியும், தேசிய மாநாட்டு கட்சியின் தலைவருமான உமர்அப்துல்லா, பீகார் மாநில எதிர்க்கட்சி தலைவரும், ராஷ்டீரிய ஜனதா தளத்தைச் சேர்ந்த தேஜஸ்வி யாதவ், கவிஞர் வைரமுத்து, நடிகர் சத்யராஜ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.
விழா இறுதியில் முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்புரை நிகழ்த்தினார்.
கட்சி பிரமுகர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் விழாவை காண்பதற்கு வசதியாக நந்தம்பாக்கம் வர்த்தக மைய வளாகத்திலும் எல்.இ.டி. அகன்ற திரையில் பார்ப்பதற்கு வசதிகள் செய்யப்பட்டு இருந்தன.
இந்த விழாவில் ராகுல் காந்தி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்பதையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருந்தது.
புறப்பட்டார்
இந்த விழா முடிந்ததும் ராகுல்காந்தி நேராக கிண்டி ஐ.டி.சி. சோழா நட்சத்திர ஓட்டலுக்கு சென்று சிறிது நேரம் ஓய்வு எடுத்த பின்னர் அங்கிருந்து மாலை 6.30 மணியளவில் புறப்பட்டு சத்தியமூர்த்தி பவனுக்கு 7 மணிக்கு சென்றார்.
சுமார் 45 நிமிட நேரம் சத்தியமூர்த்தி பவனில் இருந்க ராகுல்காந்தி 8 மணியளவில் அங்கிருந்து புறப்பட்டார். நேராக விமான நிலையம் சென்ற அவர் 8.30 மணியளவில் டெல்லி புறப்பட்டு சென்றார்.