June 12, 2026

Seithi Saral

Tamil News Channel

தமிழகத்தில் இன்று 86 பேருக்கு கொரோனா; ஒருவர் சாவு

1 min read

Corona for 86 people in Tamil Nadu today; One death

14.3.2022
தமிழகத்தில் இன்று 86 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. 204 பேர் குணமடைந்து உள்ளனர். நேற்று 95 பேருக்கு கொரோனா பாதிப்பு இருந்த நிலையில் இன்று பாதிப்பு 86 ஆக குறைந்துள்ளது.

குறைந்து வரும் கொரோனா

இது தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:-

தமிழகத்தில் 40,825 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டன. அதில், தமிழகத்தில் 86 பேர் கோவிட்டினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதன்மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 34,51,996 ஆக அதிகரித்து உள்ளது. மேலும் தற்போது வரை 6,50,47,297 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு உள்ளன.
இன்று கோவிட் உறுதியானவர்களில் 39 பேர் ஆண்கள், 47 பேர் பெண்கள். தமிழக்தில் இன்று 204 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர். இதைத் தொடர்ந்து, வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 34,12,918 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா பாதிப்பு காரணமாக இன்று கோவையில் மட்டும் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதனால், வைரஸ் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 38,024 ஆக உள்ளது.

சென்னை

சென்னையை பொறுத்தவரையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை குறைந்துள்ளது. சென்னையில் கொரோனா தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை நேற்று 35 ஆக இருந்த நிலையில் இன்று (மார்ச் 14 ம் தேதி) 33 ஆக குறைந்துள்ளது.
நெல்லையில் இன்று 2 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *