June 22, 2026

Seithi Saral

Tamil News Channel

திருப்பத்தூர் அருகே மினி வேன் கவிழ்ந்து 7 பேர் பலி

1 min read

7 killed as mini van overturns near Tirupati

2.4.2022
திருப்பத்தூர் அருகே வேன் கவிழ்ந்து 7 பேர் பலியானார்கள். பலர் காயமடைந்துள்ளனர்.

வேன் கவிழ்தது

திருப்பத்துார் அருகே ஜவ்வாதுமலையில் புங்கனுார் நாடு மலை கிராமம் உள்ளது. இந்த கிராமத்தை சேர்ந்த 30 பேர் கோவில் திருவிழாவிற்காக இன்று காலை 9:30 மணிக்கு அருகிலுள்ள நெல்லிவாசன் நாடு என்ற கிராமத்திற்கு மினி வேனில் சென்றனர். காலை 11:30 மணிக்கு புதுார்நாடு என்ற இடத்தில் சென்ற போது மினி வேன் அருகிலுள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் மினி வேன் அருகிலுள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் ஏழு பேர் பலியாகினார்.பலர் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டுள்ளனர்.

இறந்தவர்கள் புலியூர் கிராமத்தை சேர்ந்தவர்கள். சம்பவம் நடந்த இடத்திற்கு திருப்பத்துாரில் இருந்து போலீசார், தீயணைக்கும் துறையினர் சென்று இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். மலைப்பகுதி என்பதால் மீட்கும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *