June 11, 2026

Seithi Saral

Tamil News Channel

‘மன் கி பாத்’ நிகழ்ச்சிக்கு கருப்பொருள் குறித்த யோசனைகளை பிரதமருக்கு தெரிவிக்கலாம்

1 min read

Ideas on the theme for ‘Mann Ki Baat’ can be conveyed to the Prime Minister

8.4.2022
‘மன் கி பாத்’ நிகழ்ச்சியின் அடுத்த பகுதிக்கான முக்கிய கருப்பொருள்கள் மற்றும் சிக்கல்கள் பற்றிய எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ளுமாறு பிரதமர் மோடி மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

மன் கி பாத்

பிரதமர் மோடி ‘மன் கி பாத்’ என்ற நிகழ்ச்சியின் மூலம் மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 11 மணிக்கு அகில இந்திய வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார். மன் கி பாத் நிகழ்ச்சி வருகிற 24-ந்தேதி நடைபெற உள்ளது.

இந்த நிலையில் மன் கி பாத் நிகழ்ச்சியின் அடுத்த எபிசோடிற்கான கருப்பொருள்கள் குறித்த கருத்துகளை அனுப்புமாறு பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார். முக்கிய கருப்பொருள்கள் மற்றும் சிக்கல்கள் பற்றிய எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ளுமாறு பிரதமர் மோடி மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

கருத்துகளை MyGov, NaMo போன்ற செயலியிலோ அல்லது 1800-11-7800 என்ற எண்ணுக்கு அழைப்பு விடுத்தோ பதிவு செய்யுங்கள் என்று தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *