June 22, 2026

Seithi Saral

Tamil News Channel

தமிழகத்தில் இன்று 30 பேருக்கு கொரோனா

1 min read

orona for 30 people in Tamil Nadu today

17.4.2022
தமிழகத்தில் நேற்று 23 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு இருந்த நிலையில், இன்று 30 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்துள்ளது. இன்றைய கொரோனா பாதிப்பு குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

இன்று புதிதாக 16 ஆண்கள், 14 பெண்கள் என மொத்தம் 30 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக சென்னையில் 19 பேர் உள்பட 9 மாவட்டங்களில் மட்டும் தொற்று பாதிப்பு பதிவாகி உள்ளது. 29 மாவட்டங்களில் யாரும் புதிதாக பாதிக்கப்பட்டவில்லை.

அரியலூர், தர்மபுரி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, நாகப்பட்டினம், நாமக்கல், பெரம்பலூர், ராமநாதபுரம், தென்காசி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, திருவாரூர், வேலூர், விழுப்புரம், விருதுநகர் உள்ளிட்ட 15 மாவட்டங்கள் கொரோனாவே இல்லாத மாவட்டங்களாக உருவாகி உள்ளது.

தமிழகத்தில் இன்றைய நிலவரப்படி 10 பேர் மட்டுமே ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த ஒரு மாதமாக தமிழகத்தில் எந்த மாவட்டத்திலும் உயிரிழப்பு இல்லை. கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து 24 பேர் ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டுள்ளனர். தற்போது சிகிச்சையில் 231 பேர் உள்ளனர்” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *