5,440 மையங்களில் நீட் தேர்வு நடந்தது: கண்காணிப்புக்கு 1 லட்சம் கேமராக்கள்
1 min read
NEET exam held at 5,440 centers: 1 lakh cameras for surveillance
21.6.2026
நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகள், சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி படிப்புகள், ராணுவ கல்லூரிகளில் பி.எஸ்.சி. நர்சிங் படிப்புகள் மற்றும் கால்நடை மருத்துவ படிப்பின் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள் ஆகியவை நீட் தேர்வு எனப்படும் தேசிய தகுதி மற்றும் நுழைவுத்தேர்வில் தகுதி பெறுபவர்களை கொண்டு நிரப்பப்படுகின்றன.
நாடுமுழுவதும் சுமார் 22 லட்சம் மாணவர்கள் இத்தேர்வை எழுதுகின்றனர். இத்தேர்விற்காக 5,440 மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் தேர்வறையினை கண்காணிக்க 1 லட்சம் கேமராக்கள் பயன்படுத்தப்படுகிறது. இந்த தேர்வை தேசிய தேர்வுகள் முகமை ஆண்டுதோறும் நடத்துகிறது.
முன்னதாக வினாத்தாள் தகவல் கசிவைத் தொடர்ந்து மே 3 ஆம் தேதி நடைபெற்ற தேர்வு ரத்து செய்யப்பட்டது.
அதன்படி, 2026-27-ம் கல்வி ஆண்டுக்கான நீட் மறுதேர்வு நாடு முழுவதும் இன்று நடைபெற உள்ளது. பிற்பகல் 2 மணி முதல் மாலை 5.15 மணி வரை நடைபெற உள்ளது. தகுதியுள்ள மாற்றுத்திறனாளி தேர்வர்களுக்கு மாலை 6.20 மணி வரை நேரம் அனுமதிக்கப்படும்.
தேர்வு எழுத வந்த மாணவ-மாணவிகள் காலை 11 மணி முதல் மதியம் 1.30 மணி வரை தேர்வு மையத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர். தேர்வு மையத்துக்குள் மாணவ-மாணவிகள் தண்ணீர் தெளிவாக தெரியும் வகையிலான குடிநீர் பாட்டில்களை எடுத்து செல்ல அனுமதிக்கப்பட்டது. மத நம்பிக்கை சார்ந்த அடையாளங்கள் மற்றும் பொருட்களை அணியவும் அனுமதிக்கப்பட்டு இருந்தது.
சாதாரண ஆடைகளை அணியவும், முழுக்கை ஆடைகள் அல்லது கம்பளி ஆடை அணியவும் அனுமதி வழங்கப்பட்டு இருந்தது. முறையான சோதனைக்கு ஒத்துழைக்கும் விதமாக, குறிப்பிட்ட நேரத்துக்கு முன்னதாகவே மாணவ-மாணவிகள் தேர்வு மையத்துக்கு வந்திருந்தனர்.
தேர்வு எழுத வந்த மாணவ-மாணவிகள் காலை 11 மணி முதல் மதியம் 1.30 மணி வரை தேர்வு மையத்துக்குள் அனுமதிக்கத் தொடங்கினர் . தேர்வு மையத்துக்குள் மாணவ-மாணவிகள் தண்ணீர் தெளிவாக தெரியும் வகையிலான குடிநீர் பாட்டில்களை எடுத்து செல்ல அனுமதி. மத நம்பிக்கை சார்ந்த அடையாளங்கள் மற்றும் பொருட்களை அணியவும் அனுமதிக்கப்பட்டு உள்ளது.
சாதாரண ஆடைகளை அணியவும், முழுக்கை ஆடைகள் அல்லது கம்பளி ஆடை அணியவும் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. முறையான சோதனைக்கு ஒத்துழைக்கும் விதமாக, குறிப்பிட்ட நேரத்துக்கு முன்னதாகவே மாணவ-மாணவிகள் தேர்வு மையத்துக்கு வரத்தொடங்கினர்.
முன்னதாக தேர்வர்கள் உயரம் குறைந்த, சாதாரண காலணிகளை அணியலாம் என்று அறிவுறுத்தப்பட்டு இருந்தது. உயரமான காலணிகள் மற்றும் கனமான அணிகலன்கள் அணிய தடைவிதிக்கப்பட்டது. மதியம் 1.30 மணிக்கு பிறகு வந்தால் அனுமதி இல்லை என்று அறிவிக்கப்பட்டு இருந்ததால் மாணவ-மாணவிகள் அதற்கு முன்னதாகவே தேர்வு மையத்துக்கு வர அறிவுறுத்தப்பட்டது.