June 22, 2026

Seithi Saral

Tamil News Channel

அமோனியா கசிவால் 2 பேர் பலி – மோடி, அண்ணாமலை இரங்கல்

1 min read

Two dead in ammonia leak – Modi, Annamalai offer condolences

21.6.2026
திருவள்ளூரில் அமோனியா வாயு கசிவால் 2 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக பல்வேறு அரசியல் தலைவர்கள் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் பிரதமர் நரேந்திரன் மோடி தனது இரங்கலை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வெளியான எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-

தமிழ்நாட்டின் திருவள்ளூர் மாவட்டத்தில் நேரிட்ட விபத்து குறித்து அறிந்து மிகுந்த வேதனையடைந்தேன். இந்தச் சம்பவத்தில் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே உள்ள இறால் பண்ணை ஒன்றில், அமோனியா வாயு கசிவால் பாதிக்கப்பட்டு, 2 பேர் உயிரிழந்த செய்தி, மிகுந்த அதிர்ச்சியும், வருத்தமும் அளிக்கிறது.

தமிழக அரசு முழு விசாரணை நடத்தி, விதி மீறல்கள் இருந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்கள், விரைவாக நலம்பெற வேண்டி கொள்கிறேன்.

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *