இந்தியாவில் மேலும் 3,688 பேருக்கு கொரோனா
1 min readCorona for a further 3,688 people in India
30.4.2022
இந்தியாவில் புதிதாக 3,688 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியால் கொரோனா
இந்தியாவின் வட மாநிலங்களில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து உயர்ந்து வருகிறது. நேற்று முன்தினம் 3,303 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. நேற்று மேலும் 3,377 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.
இந்நிலையில் இன்று புதிதாக 3,688 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியானது. இதுதொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3 ஆயிரத்து 688 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4 கோடியே 30 லட்சத்து 75 ஆயிரத்து 864 ஆக உயர்ந்தது.
அதேபோல், தொற்று பாதிப்புகளுக்கு ஒரே நாளில் 50 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 5,23,803 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 2,755 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,25,33,377 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் கொரோனா தொற்றுக்கு தற்போது 18,684 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவில் இதுவரை 1,88,89,90,935 பேருக்கு (கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 22,58,059 பேர்) கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதனிடையே இந்தியாவில் கொரோனா பாதிப்பை கண்டறிய நேற்று ஒரே நாளில் 4,96,640 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும், இதுவரை மொத்தம் 83,74,42,023 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) தெரிவித்துள்ளது.