தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு வெப்பநிலை அதிகரிக்கும்
1 min readTemperatures will rise in Tamil Nadu for the next 3 days
30.42022
தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரிக்கும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது.
வெப்பநிலை
தமிழகத்தில் மதிய வேளைகளில் மக்கள் வெளியே செல்ல முடியாத அளவுக்கு வெயில் கொளுத்துகிறது. நேற்று தமிழகக்த்தில் 10 இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெப்பம் பதிவாகியுள்ளது.
இந்த நிலையில், தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு வெப்பநிலை இயல்பை விட 2 – 3 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
மேலும், மதியம் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வெப்பம் அதிகம் இருக்கும் காரணத்தினால், மக்கள் வெளியே செல்ல வேண்டாம் எனவும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
அக்னி நட்சத்திரம் என்று அழைக்கப்படும் கத்தரி வெயில் இன்னும் ஒரு சில தினங்களில் தொடங்க உள்ள நிலையில், தமிழகத்தில் வெப்பம் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.