June 13, 2026

Seithi Saral

Tamil News Channel

கல்குவாரிகளை தடைசெய்ய, ஆக்கிரமிப்புகளை அகற்ற கீழக்கடையம் கிராம சபையில் தீர்மானம்

1 min read

Resolution of the Kila Kadayam Grama saba Council to ban quarries and remove encroachments

1.5.2022
கல்குவாரிகளை தடைசெய்ய வேண்டும், ஆக்கிரமிப்புகளை அகற்றவேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் கீழக்கடையம் கிராம சபை கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.

கிராமசபை கூட்டம்

தமிழகம் முழுவதும் அரசு உத்தரவுப்படி மேதினத்தை முன்னிட்டு அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. தென்காசி மாவட்டம் கீழக்கடையம் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் எஸ்.பூமிநாத் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் விக்டர் துரைசிங் முன்னிலை வகித்தார். ஊராட்சி செயலாளர் வரவேற்புரை நிகழ்த்தி வரவு-செலவு அறிக்கைகள் மற்றும் தீர்மானங்களை வாசித்தார்.

கூட்டத்திற்கு இதுவரை இருந்திருந்தராத வகையில் திரளான மக்கள் வந்திருந்தனர். அவர்கள் பல்வேறு கோரிக்கைளை முன்வைத்து மனு கொடுத்தனர். குடிநீர் சீராக வழங்க வேண்டும் என்றும் பழுதடைந்த சாலையை சீர் செய்ய வேண்டும் என்பறும் பலர் கோரினார்கள்.
ஆதிமூலம் நலத்தி்ட்ட உதவிகள் வழங்கும் கண்காணிக்கும் குழுவினர் சாதாரண மக்கள் இடம்பெற வேண்டும் என்றார்.

பாராட்டு

எழுத்தாளர் பாலன் செட்டிமடம் மற்றும் ஜம்பு நதியை கரையை தூய்மை படுத்தியமைக்கு பஞ்சாயத்து தலைவர் பூமிநாத்துக்கு நன்றி தெரிவித்தார். மேலும் ஆக்கிரமிப்புகளை அகற்றி பஞ்சாயத்து இடத்தில் விடுதி, தொழில் கூடம் அமைத்து பஞ்சாயத்து வருமானத்தை பெருக்க வேண்டும் என்றார்.
கவியரன், தண்ணீர் வரி, வீட்டுவரியை ஆள் வைத்து வீடுவீடாக சென்று வசூல் செய்ய வேண்டும் என்றார்.
சுரேஷ் கீழக்கடையம் மயானத்தில் மின்சார எரியூட்டும் வசதி செய்ய வேண்டும் என்றார்.

ஆக்கிரமிப்பு

ரிலையபிள் கல்வி நிறுவன நிர்வாகி சந்திரசேகர் கூறும்போது கடையம் யூனியன் அலுவலம் மற்றும் அதை சுற்றியுள்ள இடம் முழுவதும் கீழக்கடையத்திற்கு உரியது. அதை சிலர் ஆக்கிரமித்து வைத்துள்ளார்கள். இதனால் கடையத்தில் வளர்ச்சிப்பணிகள் தடைபடுகிறது. எனவே ஆக்கிரமிப்புகளை அகற்றி அதை கையகப்படுத்த வேண்டும் என்று கூறினார்.

கூட்டத்தில் கடையம் ஒன்றியத்தில் செயல்பட்டு வரும் கல்குவாரிகளில் இருந்து சட்டவிரோதமாக கேரளாவிற்கு கனரக வாகனங்களில் தினமும் ஆயிரக்கணக்கான டன் கனிமவளங்கள் கொண்டு செல்லப்படுவதை தடுக்க வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கீழக்கடையம் பகுதியில் புதிய பஸ் நிலையம், பல்நோக்கு உள் விளையாட்டு அரங்கம், சிறுவர் பூங்கா, பொதுமக்களுக்கான உடற்பயிற்சி பூங்கா, அரசு கலைக்கல்லூரி, புதிய மின்தகன மையம், ஊராட்சி வருவாய் இனங்களை அதிகரிக்க வணிக வளாகங்கள், பெண்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க தொழிற்பயிற்சி மற்றும் தொழிற்குழுக்கள் ஏற்படுத்துதல், பள்ளி மற்றும் கல்லூரி முடித்த மாணவ மாணவிகளுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வழிகாட்டுதல் முகாம் நடத்துதல், பிளாஸ்டிக் ஒழிப்பு நடவடிக்கைகள், இயற்கை பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் ஒன்றிய கவுன்சிலர்கள் புளிகணேசன், ரம்யா, பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், பஞ்சாயத்து வார்டு உறுப்பினர்கள், அரசு துறை அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *