June 21, 2026

Seithi Saral

Tamil News Channel

கடையத்தில் புத்தக கண்காட்சி

1 min read

Book fair in the Kadayam

5.5.2022
தமிழகத்தில் இன்று சற்று தினசரி கொரோனா பாதிப்பு சற்று அதிகரித்துள்ளது. இன்று 58 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா

தமிழ்நாட்டில் இன்றைய கொரோனா பாதிப்பு விவரத்தை மருத்துவம் – மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டது. அதன்விவரம் வருமாறு:-

தமிழ்நாட்டில் இன்று 58 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது நேற்று முன் தின பாதிப்பான 39 மற்றும் நேற்றைய பாதிப்பான 37-ஐ விட அதிகமாகும். இதனால், தமிழ்நாட்டில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 34 லட்சத்து 54 ஆயிரத்து 153 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து இன்று 59 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால், தமிழ்நாட்டில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 34 லட்சத்து 15 ஆயிரத்து 662 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 466 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா தாக்குதலுக்கு இன்று யாரும் உயிரிழக்கவில்லை. இதனால், தமிழ்நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 38 ஆயிரத்து 25 என்ற அளவில் உள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *