June 14, 2026

Seithi Saral

Tamil News Channel

பள்ளிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்துவதை கட்டாயமாக்கலாம்- சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தல்

1 min read

Mandatory installation of surveillance cameras in schools- Supreme Court instruction

19.5.2022
பள்ளிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்துவதை கட்டாயமாக்கலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தியுள்ளது.

பாலியல் தொல்லை

பணியிடங்களில் பாலியல் தொல்லைகளை தடுக்க விசாகா கமிட்டி வழிகாட்டு நெறிமுறைகள் இருப்பது போல் பள்ளிகளிலும் வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க உத்தரவிடக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை நேற்று நடந்தது.

கண்காணிப்பு கேமரா

அப்போது நீதிபதிகள் கூறும்போது, பள்ளி குழந்தைகளை பாலியல் தொல்லைகளில் இருந்து பாதுகாக்க ஒருங்கிணைந்த வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்கலாம். அனைத்து பள்ளிகளிலும் முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்துவதை கட்டாயமாக்கலாம் என்று அறிவுறுத்தினர். இந்த மனு மீது பதிலளிக்க மத்திய மற்றும் அனைத்து மாநில அரசுகளுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *