June 15, 2026

Seithi Saral

Tamil News Channel

பாட்டியாலா மத்திய சிறையில் உள்ள நவ்ஜோத் சிங் சித்துவுக்கு கிளார்க் பணி

1 min read

Clerk assignment to Navjot Singh Sidhu in Patiala Central Jail

26/5/2022-
சாலை விபத்து வழக்கில் நவ்ஜோத் சிங் சித்து பாட்டியாலா மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு சிறையில் கிளார்க் பணி வழங்கப்பட்டு உ்ளளது.

சித்துவுக்கு சிறை தண்டனை

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், பஞ்சாப் முன்னாள் காங்கிரஸ் தலைவருமான நவ்ஜோத் சிங் சித்துவால் கடந்த 1988-ம் ஆண்டு நடைபெற்ற சாலை விபத்தில் குர்னம்சிங் என்ற முதியவர் உயிரிழந்தார். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு அரியானா ஐகோர்ட்டில் விசாரணை நடைபெற்றது. இந்த வழக்கின் விசாரணையில் சித்துவிற்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து ஐகோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
இந்த தீர்ப்பை எதிர்த்து சித்து சுப்ரீம்கோர்ட்டில் நவ்ஜோத் சிங் சித்து மேல்முறையீடு செய்தார். இது தொடர்பான வழக்கு பல ஆண்டுகளாக சுப்ரீம்கோர்ட்டில் நடைபெற்று வந்த நிலையில் கடந்த 19 ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது. இதுதொடர்பான அந்த தீர்ப்பில், நவ்ஜோத் சிங் சித்துவுக்கு ஓராண்டு சிறைத் தண்டனை விதித்து சுப்ரீம்கோர்ட்டு உத்தரவிட்டது.

கிளார்க்

அதை தொடர்ந்து அவர் சாலை விபத்து வழக்கில் சித்து பாட்டியாலா மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் சித்துவுக்கு பாட்டியாலா மத்திய சிறையில் கிளார்க் பணி வழங்கப்பட்டுள்ளது. இந்த ஓராண்டு சிறை தண்டனை காலத்தில் அவர் சிறையில் கிளார்க் பணி ஆற்ற உள்ளார்

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *