லாரி மீது ஆம்புலன்ஸ் மோதி விபத்தில் 7 பேர் பலி
1 min read7 killed in ambulance collision with lorry
31.5.2022
லாரி மீது ஆம்புலன்ஸ் மோதி விபத்துக்குள்ளான சம்பவத்தில் 7 பேர் உயிரிழந்தனர்.
விபத்து
டெல்லியில் இருந்து ஆம்புலன்ஸ் ஒன்று இன்று காலை உத்தரபிரதேசம் நோக்கி சென்றுகொண்டிருந்தது. உத்தரபிரதேசத்தின் படிகஞ்ச் பாஷிம் பகுதியில் பயணித்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த ஆம்புலன்ஸ் தடுப்புகள் மீது மோதி சாலையின் மறுபக்கத்திற்கு சென்றது. அப்போது, அந்த சாலையில் சென்றுகொண்டிருந்த லாரி மீது வேகமாக மோதியது.
7 பேர் பலி
இந்த கோர விபத்தில் 7 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் உயிரிழந்தவர்களின் உடலை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். ஆம்புலன்ஸ் டிரைவர் தூங்கியதால் இந்த விபத்து நடந்திருக்கலாம் என்று முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.