ஆட்டோ மீது மின்கம்பி விழுந்ததால் 8 பேர் உடல் கருகி சாவு
1 min read8 people burnt to death due to electric wire falling on auto
30.6.2022
ஆட்டோ மீது உயர் மின் அழுத்த கம்பி விழுந்ததால் ஏற்பட்ட தீ விபத்தில் பயணிகள் 8 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.
தீவிபத்து
ஆந்திர மாநிலம் சத்யசாய் மாவட்டம் தடிமரி பகுதியில் உள்ள சிலகொண்டையா பல்லி கிராமத்தை சேர்ந்த சிலர் விவசாய பணிக்காக ஆட்டோவில் இன்று காலை சென்றுகொண்டிருந்தனர். ஆட்டோவில் மொத்தம் 8 பேர் பயணித்தனர். ஆட்டோ கிராமத்தை தாண்டி சென்றுகொண்டிருந்தபோது மேலே சென்றுகொண்டிருந்த உயர் மின் அழுத்த கம்பி ஆட்டோ மீது விழுந்தது. இதனால், ஆட்டோ முழுவதும் மின்சாரம் பாய்ந்து உடனடியாக தீப்பற்றியது.
8 பேர் சாவு
இதனால், ஆட்டோவில் இருந்த அனைவர் மீதும் மின்சாரம் பாய்ந்து தீப்பற்றியது. ஆட்டோவில் இருந்து இறக்க முயற்சித்தபோதும் தீ வேகமாக பரவியதால் பயணிகள் ஆட்டோவிற்குள்ளேயே சிக்கிக்கொண்டனர். இந்த தீ விபத்தில் ஆட்டோவில் பயணித்த 8 பேரும் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார், மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உயிரிழந்தவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.