இந்தியாவில் புதிதாக 18,819 பேருக்கு கொரோனா
1 min readCorona for 18,819 newcomers in India
30.6.2022
இந்தியாவில் புதிதாக 18,819 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது.
இந்தியாவில் கொரோனா
இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்பான விவரத்தை சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று காலை வெளியிட்டது. அதன் விவகாரம் வருமாறு:-
இந்தியாவில் இன்று காலை கடந்த 24 மணி நேரத்தில் 18 ஆயிரத்து 819 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது முந்தைய நாள் பாதிப்பான 11 ஆயிரத்து 793 மற்றும் நேற்றைய பாதிப்பான 14 ஆயிரத்து 506-ஐ விட அதிகமாகும். இதனால், நாட்டில் இதுவரை கொரோனாவால் பாதிக்கபட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 34 லட்சத்து 52 ஆயிரத்து 164 ஆக அதிகரித்துள்ளது.
இன்று காலைவரை கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 13 ஆயிரத்து 827 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 28 லட்சத்து 22 ஆயிரத்து 493 ஆக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 1 லட்சத்து 4 ஆயிரத்து 555 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
39 பேர் சாவு
கொரோனா தாக்குதலுக்கு ஒரு நாளில் 39 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 25 ஆயிரத்து 116 ஆக அதிகரித்துள்ளது. அதேவேளை நாடு முழுவதும் இதுவரை 197.61 கோடி தடுப்பூசி டோஸ்கள் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது.
மேற்கண்டவாறு சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.