லட்சுமி கணபதி ஆசிரம கோவிலில் மண்டலாபிஷேகம்
1 min read
Mandala Abhishekam at Lakshmi Ganapati Ashram Temple
30.6.2022
மதுரை சத்திரப்பட்டி லட்சுமி கணபதி ஆசிரமத்தில் உள்ள சித்தி புத்தி சமேத லட்சுமி கணபதி கோவிலில் ஏற்கனவே கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. தற்போது 48 நாட்கள் பூஜைகள் நடத்தப்பட்டு மண்டல பூஜைகள் நடத்தப்பட்டது.
ராமாச்சாரி தலைமையிலான குழுவினர் யாகம் நடத்தினர். பின்னர் சித்தி புத்தி சமேத லட்சுமி கணபதி, அனுக்ஞை விநாயகர்,ஞானமுருகன்,துர்க்கை,ஜெய வீர ஆஞ்சநேயர், புவனேஸ்வரி சமேத சோமசுந்தர லிங்கேஸ்வரர் ஆகிய சுவாமி சிலைகளுக்கு ம் அபிஷேகம் செய்யப்பட்டது. அதன்பின் சோம சுந்தர விநாயக அடிகளாரின் அதிர்ஷ்டானுக்கு சிறப்புஅபிஷேகம் செய்யப்பட்டது.
இதில் ஆசிரம நிர்வாகியும்.சுவாமி சோமசுந்தர விநாயக அடிகளாரின் மனைவியுமான லட்சுமி அம்மாள்,ராம்நாத்,தி.பாலசுப்பிரமணியன்,தினேஷ் ,உஷா ,கார்த்தி உள்பட பலரும் கலந்து கொண்டனர்.