June 5, 2026

Seithi Saral

Tamil News Channel

இந்தியாவில் மேலும் புதிதாக 18,930 பேருக்கு கொரோனா

1 min read

18,930 new corona cases in India

7.7.2022
இந்தியாவில் மேலும் புதிதாக 18,930 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது.

கொரோனா

நாட்டில் கொரோனா பாதிப்பு, ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. நேற்று முன்தினம் தினசரி பாதிப்பு 16 ஆயிரத்து 135 என்ற எண்ணிக்கையில் இருந்து அதிரடியாக 13 ஆயிரத்து 86 ஆக சரிந்தது. நேற்று மறுபடியும் அதிகரித்தது.
இதன்படி நேற்று ஒரேநாளில் 16 ஆயிரத்து 159 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி இருந்தது. இந்நிலையில் மீண்டும் கொரோனா பாதிப்பு இன்று அதிகரித்துள்ளது. இதுதொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில், இந்தியாவில் இன்று காலை வரை இன்று காலை வரை கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 18 ஆயிரத்து 930 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4,35,66,739 ஆக அதிகரித்துள்ளது.

35 பேர் சாவு

அதேபோல், தொற்று பாதிப்புகளுக்கு ஒரே நாளில் 35 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 5,25,305 ஆக உயர்ந்துள்ளது. இன்று காலை வரை கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 14,650 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,29,21,977 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனா தொற்றுக்கு தற்போது 1,19,457 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவில் இதுவரை 1,98,33,18,772 பேருக்கு (இனறு காலை வரை கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 11,44,489 பேர்) கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
இவ்வாறு மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதனிடையே இந்தியாவில் கொரோனா பாதிப்பை கண்டறிய நேற்று ஒரே நாளில் 4,38,005 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும், இதுவரை மொத்தம் 86,53,43,689 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) தெரிவித்துள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *