நபிகள் நாயகம் விவகாரம் பற்றி சமூக ஊடகங்களில் கருத்து தெரிவித்தவர் கைது
1 min read
A person who commented on the Prophet’s issue on social media was arrested
7.7.2022
நபிகள் நாயகம் விவகாரத்தில் கொலை செய்யப்பட்டவர்கள் தொடர்பாக சமூக ஊடகங்களில் கருத்து தெரிவித்தவர் கைது செய்யப்பட்டார்.
நபிகள் நாயகம்
நபிகள் நாயகத்திற்கு எதிராக நூபுர் சர்மா சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்ததை அடுத்து அவர் பா.ஜனதாவில் இருந்து நீக்கப்பட்டார். இந்த கருத்துக்கு ஆதரவு தெரிவித்த ராஜஸ்தானை சேர்ந்த தையல்காரர் கன்னையா லால் என்பவரை 2 பேர் கொலை செய்தனர். இதேபோல மராட்டியத்தில் அமராவதியை சேர்ந்த மருந்து கடைக்காரர் ஒருவரும் கொலை செய்யப்பட்டார்.
இதனால் பல்வேறு சமூக ஊடகங்களை குற்றப்பிரிவு போலீசார் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்.
கைது
இந்த நிலையில் சமூக ஊடகங்களில் ஒருவர் நபிகள் நாயகம் தொடர்பாக யாரேனும் கருத்து தெரிவித்தால் கன்னையா லாலுக்கு ஏற்பட்ட விளைவுகள் ஏற்படும் என ஆட்சேபனைக்குரிய கருத்து தெரிவித்து இருந்தார். இதனை கண்காணித்த அதிகாரிகள் தென்மும்பை ஆசாத் மைதான் போலீசில் புகார் அளித்தனர். இந்த புகாரின் படி போலீசார் நடத்திய விசாரணையில் பாந்திரா கே.சி மார்க் பகுதியை சேர்ந்த ரிஸ்வான் சேக் என்பவர் இந்த பதிவை வெளியிட்டது தெரியவந்தது. இதன்படி போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த நபரை கைது செய்தனர். பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.