October 14, 2024

Seithi Saral

Tamil News Channel

5 ஜி அலைக்கற்றை ஏலம் ரூ.1 லட்சத்து 49 ஆயிரத்து 967 கோடியை தாண்டியது

1 min read

5G spectrum auction crosses Rs 1 lakh 49 thousand 967 crore

30.7.2022
5ஜி அலைக்கற்றை 5-வது நாள் ஏலம்: 30 சுற்றுகள் முடிவில் ரூ.1 லட்சத்து 49 ஆயிரத்து 967 கோடியை தாண்டியது

5ஜி அலைகற்றை

இந்தியாவில் தொலைபேசி சேவைகளுக்கான 5ஜி அலைக்கற்றை ஏலம், 5 நாட்களாக நடைபெற்று வருகிறது. புதுடெல்லி, இந்தியாவில் தொலைபேசி சேவைகளுக்கான 5ஜி அலைக்கற்றை ஏலம், கடந்த 4 நாட்களாக நடைபெற்று வருகிறது. இந்தியாவில் 5ஜி அலைக்கற்றைக்கான ஏலம் மூன்றாவது நாளை கடந்து இன்றும் நடைபெற்றது.
இந்த ஏலத்தில் ரிலையன்ஸ் ஜியோ, பாரத் ஏா்டெல், வோடஃபோன் மற்றும் உலக முன்னணி பணக்காரரான கவுதம் அதானியின் அதானி என்டா்பிரைசஸ் ஆகிய 4 நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன. இந்தநிலையில் கடந்த 5 நாட்களில் 30 சுற்று ஏலம் முடிந்துவிட்டதாக மத்திய தொலைத்தொடர்புத்துறை மந்திரி அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். முதல் நாள் ஏலத்தில் ரூ.1 லட்சத்து 45 ஆயிரம் கோடி வரை ஏலம் கேட்கப்பட்டதாக மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை தெரிவித்து இருந்தது. நேற்று 2-ஆம் நாள் முடிவில் இந்த தொகை ரூ.1,49,454 கோடி வரை கேட்கப்பட்டது. அதை தொடந்து இன்று 3-வது நாள் ஏலம் முடிவடைந்துள்ளது. 3-வது நாள் முடிவில் இந்த 5ஜி அலைக்கற்றை ஏலம் ரூ.1,49,623 கோடியை எட்டியது.
அதன்படி, நான்காம் நாள் ஏலத்தின் முடிவில், 23 சுற்றுகள் நடைபெற்ற ஏலத்தில் 5ஜி அலைக்கற்றைக்கான ஏலத்தொகை ரூ.1 லட்சத்து 49 ஆயிரத்து 855 கோடியை தாண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. இன்னும் முடிவு எட்டப்படாததால் 5-வது நாள் ஏலம் நடைபெற்றது. ஐந்தாம் நாளான இன்றைய ஏலத்தின் முடிவில், 30 சுற்றுகள் நடைபெற்ற ஏலத்தில் 5ஜி அலைக்கற்றைக்கான ஏலத்தொகை ரூ.1 லட்சத்து 49 ஆயிரத்து 967 கோடியை தாண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. இன்னும் முடிவு எட்டப்படாததால் 6-வது நாள் ஏலம் நடைபெறும் எனத் தெரிகிறது. அதிகபட்ச டெபாசிட் தொகையாக ரூ.14 ஆயிரம் கோடியை ரிலையன்ஸ் ஜியோ கொடுத்துள்ளது. அதற்கு அடுத்த இடத்தில் பார்தி ஏா்டெல் ரூ.5500 கோடியை டெபாசிட் செய்துள்ளது. இதன் அடிப்படையில், தகுதி புள்ளிகள் வழங்கப்படுகின்றன. ரிலையன்ஸ் ஜியோ இன்போகாம் நிறுவனத்துக்கு 1,59,830 புள்ளிகள் ஏலத்துக்காக அளிக்கப்பட்டுள்ளன. பார்தி ஏா்டெல்க்கு 66,330 புள்ளிகளும், வோடபோன் – ஐடியா லிமிடெட்க்கு 29,370 புள்ளிகளும், அதானி டேட்டா-வொர்க்ஸ் லிமிடெட்க்கு 1,650 புள்ளிகளும் ஏலத்துக்காக அளிக்கப்பட்டுள்ளன.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.