வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய நாளை கடைசி நாள்
1 min readTomorrow is the last day to file income tax returns
30.7.2022
வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய நாளை கடைசி நாள் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
வருமானவரி கணக்கு
ஒவ்வொரு ஆண்டும் வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கு காலக்கெடு நிர்ணயிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில், கடந்த நிதியாண்டுக்கான வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கு கடைசி தேதி ஜூலை 31 ஆம் தேதி ஆகும். இந்த நிலையில், நாளையுடன்(ஞாயிற்றக்கிழமை) வருமானவரி தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நிறைவடைவதால் ஆன்லைனில் தங்களது வருமான வரியை தாக்கல் செய்ய பலரும் முனைப்புடன் செயல்பட்டு வருகின்றனர். இதற்கிடையில், வருமான வரியை தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும் என்று இணையதளம் வாயிலாக பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வரு கின்றனர்.ஆனால், வருமானவரி தாக்கல் செய்வதற்கான காலக்கடுவை நீட்டிக்கும் திட்டம் இல்லை என மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இந்த நிலையில், நாளையுடன் வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய காலக்கெடு நிறைவடையும் நிலையில், வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய தாமதித்தால், ரூ.5 லட்சத்திற்கும் குறைவாக தாக்கல் செய்பவர்களுக்கு ரூ.1,000-மும், ரூ.5 லட்சத்திற்கும் அதிகமாக தாக்கல் செய்பவர்களுக்கு ரூ.5,000-மும் அபராதமாக விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.