புதுக்கோட்டையில் தேர் கவிழ்ந்து விபத்து -10 பேர் காயம்
1 min readChariot overturns accident in Pudukottai – 10 injured
31.7.2022
புதுக்கோட்டை தேரோட்டத்தின் போது தேர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 10 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
தேரோட்டம்
திருக்கோகர்ணம் பிரகதாம்பாள் கோயிலில், இன்று ஆடித்தேரோட்டம் நடைபெற்றது. கொரோனா காரணமாக இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற இந்த தேரோட்டத்தில், ஏராளாமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
கோயில் நிலையில் இருந்து வெளியே கொண்டுவரப்பட்ட தேரானது, வடம் பிடித்து இழுக்க தொடங்கிய சிறிது நேரத்தில் திடீரென முன்பக்கமாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் தேருக்கு அருகில் இருந்த பக்தர்கள், தேரில் இருந்து பூஜை செய்து கொண்டிருந்த சுவாமிகள் என 10 க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இதனையடுத்து உடனடியாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர், காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
தேரின் வடத்தை பக்தர்கள் வேகமாக பிடித்து இழுத்ததால், சாய் தளத்தில் இருந்து சறுக்கி தேர் முன்பக்கமாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாக முதற்கட்ட தகவல் வெளியாகியிருக்கிறது. இருந்தபோதிலும், தேர்விபத்து குறித்து காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விராசணை மேற்கொண்டு வருகின்றனர்.