அனைத்து காவலர்களுக்கும் காவல் பதக்கம் – முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
1 min readPolice medal for all constables – Chief Minister M.K.Stal’s announcement
31.7.2022
தமிழக காவல்துறையில் டிஜிபி முதல் காவலர் வரை அனைவருக்கும் காவல் பதக்கம் வழங்கப்படும் என்று முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
பதக்கம்
தமிழக காவல்துறையில் டிஜிபி முதல் காவலர் வரை அனைவருக்கும் தமிழ்நாடு அரசின் காவல் பதக்கம் வழங்கப்படும் என்று முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழக போலீசாருக்கு மிக உயரிய ஜனாதிபதியின் சிறப்பு கொடி வழங்கப்பட்டுள்ளது. இதுபோன்ற சிறப்பு கொடி இந்தியாவில் இதுவரை 10 மாநில போலீசாருக்கு தான் வழங்கப்பட்டுள்ளது. தென்மாநிலங்களில் இந்த சிறப்பை பெறும் முதல் மாநிலம் தமிழகம் தான். தமிழக போலீஸ் துறைக்கு கவுரவமிக்க ஜனாதிபதியின் கொடி வழங்கும் விழா சென்னை எழும்பூர் ராஜரத்தினம் அரங்கில் நடைபெற்றது.
இந்த விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலை வகித்தார். துணை துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டுள்ளார். விழாவில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவுக்கு தமிழக போலீசார் சார்பில் சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த நிலையில் இந்த விழாவில் பேசிய முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின், “தமிழ்நாடு காவல்துறை தொடங்கி 160 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், ஜனாதிபதியின் வண்ணக்கொடி பெறும் நிகழ்வை முன்னிட்டு காவல்துறை தலைமை இயக்குனர் முதல் காவலர் வரை அனைவருக்கும் தமிழ்நாடு அரசு காவல் பதக்கம் வழங்கப்பட உள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். மக்களைக் காப்போம், மகத்தான மாநிலமாக தமிழகத்தை உயர்த்திக்காட்டுவோம்” என்று கூறினார்.