தமிழ்நாட்டில் குடும்ப அரசியல் -பாஜக தேசிய தலைவர் தாக்கு
1 min read
Family Politics in Tamil Nadu – BJP National Leader Thaku
31..7.2022
தமிழ்நாட்டில் குடும்ப அரசியல் தலைவிரித்தாடுவதாக பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா கூறினார்.
ஜே.பி.நட்டா
பீகார் தலைநகர் பாட்னாவில் மாவட்ட புதிதாக கட்டப்பட்ட மாவட்ட பாஜக அலுவலகத்தை பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா இன்று திறந்துவைத்தார். இந்த திறப்பு விழா நிகழ்ச்சியில் ஜேபி நட்டா பேசியதாவது:-
நாம் இதை ஒருபோதும் பாஜக அலுவலகம் என்று கூறமாட்டோம். இதை காரியாலயா என்று நாம் கூறுவோம். அலுவலகம் என்பது காலை 10 மணிக்கு திறந்து மாலை 5 மணிக்கு மூடப்படும். ஆனால் காரியாலயா நமது சித்தாத்தத்துடன் வாழும் உருவகம். இது ஒருபோதும் மூடப்படாது.
குடும்ப அரசியல்
மக்கள் ஜனநாயக கட்சி, ஜம்மு-காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி, ஷிரோமனி அகாலி தளம், காங்கிரஸ், சமாஜ்வாதி, ராஷ்டிரிய ஜனதா தளம், தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி, சிவசேனா ஆகிய கட்சிகளிலும் அரியானா, கேரளா, தமிழ்நாடு, மேற்குவங்களாம் மேலும் சில மாநிலங்களிலும் குடும்ப அரசியல் தலைவிரித்தாடுகிறது. குடும்ப அரசியலுக்கு எதிராக போராடுவதே நமது மிகப்பெரிய சவால்.
இவ்வாறு அவர் பேசினார்.