May 21, 2024

Seithi Saral

Tamil News Channel

மந்திரி ரோஜாவை ஒரே நேரத்தில் 3 ஆயிரம் பேர் புகைப்படம் எடுத்து கின்னஸ் சாதனை

1 min read

3,000 people took a picture of Mantri Roja at the same time, a Guinness World Record

31/7/2022
கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெறுவதற்காக மந்திரி ரோஜாவை ஒரே நேரத்தில் 3 ஆயிரம் பேர் போட்டோ எடுக்க ஏற்பாடு செய்யப்பட்டது.

மந்திரி ரோஜா

ஆந்திர மாநில விளையாட்டு மற்றும் இளைஞர் மேம்பாட்டு துறை மந்திரியாக இருப்பவர் ரோஜா. கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெறுவதற்காக மந்திரி ரோஜாவை ஒரே நேரத்தில் 3 ஆயிரம் பேர் போட்டோ எடுக்க ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி ஆந்திரா, தெலுங்கானாவை சேர்ந்த 3 ஆயிரம் போட்டோகிராபர்கள் நேற்று விஜயவாடாவில் உள்ள தனியார் மண்டபத்தில் குவிந்தனர். இதையடுத்து அமைச்சர் ரோஜா திருமண மண்டபத்திற்கு வெளியே அமைக்கப்பட்டு இருந்த மேடையில் ஏறினார். அவரை சுற்றிலும் 3 ஆயிரம் போட்டோகிராபர்கள் நிற்கவைக்கப்பட்டனர். ஒன் கிளிக் ஆன் சேம் டைம் என்ற அர்த்தத்தில் ஒரே நேரத்தில் 3 ஆயிரம் போட்டோகிராபர்களும் அமைச்சர் ரோஜாவை போட்டோ எடுத்தனர்.

உலகத்தில் இதுவரை யாரும் பெண் மந்திரி ஒருவரை ஒரே நேரத்தில் 3 ஆயிரம் போட்டோகிராபர்கள் போட்டோ எடுக்கவில்லை. இதையடுத்து ‘வொண்டர் புக் ஆப் ரெக்கார்ட்’ கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தார். இதையடுத்து மந்திரி ரோஜாவுக்கு கின்னஸ் சாதனைக்கான சான்றிதழ் வழங்கப்பட்டது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.