குண்டு பாய்ந்து உயிரிழந்த ராணுவ மோப்ப நாய்க்கு இறுதி அஞ்சலி
1 min readLast tribute to army sniffer dog who died in shelling
31.7.2022
காஷ்மீரில் பயங்கரவாத வேட்டையில் பல குண்டுகள் பாய்ந்து உயிரிழந்த ராணுவத்தின் மோப்ப நாய்க்கு இறுதியஞ்சலி செலுத்தப்பட்டது.
மோப்பநாய்
ஜம்மு மற்றும் காஷ்மீரின் பாராமுல்லா மாவட்டத்தில் வானிகாம் பகுதியில், பயங்கரவாத தடுப்பு வேட்டையில் பாதுகாப்பு படையினர் நேற்று ஈடுபட்டு இருந்தனர். அவர்களுடன் ஆக்செல் என்ற மோப்ப நாய் ஒன்றும் ஈடுபட்டு இருந்தது. இதில், ஆக்செல் மீது திடீரென துப்பாக்கி குண்டுகள் பாய்ந்துள்ளது. இந்த சம்பவத்தில் மோப்ப நாய் படுகாயம் அடைந்து உயிரிழந்தது. பிரேத பரிசோதனை முடிவில், தலையில் 3 குண்டுகள் பாய்ந்திருந்ததும், கால் பகுதியில் 10 இடங்களில் காயங்களும் மற்றும் சிராய்ப்புகளும் ஏற்பட்டு இருந்தது தெரிய வந்துள்ளது.
இதனை தொடர்ந்து அதன் இறுதி அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி இன்று நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது. இதன்படி பாராமுல்லா மாவட்டத்தில், ராணுவ வீரர்கள் சூழ அதற்கு மலர் வளையம் வைத்து இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது.