July 5, 2025

Seithi Saral

Tamil News Channel

அடுத்தடுத்து அண்ணனும் தம்பியும் பாம்பு கடித்து சாவு

1 min read

His brother and younger brother died after being bitten by a snake

5.8.2022
பாம்பு கடித்து உயிரிழந்த அண்ணனின் இறுதிச்சடங்கில் பங்கேற்க சென்ற தம்பியும் பாம்பு கடித்ததில் இறந்தார்.

பாம்பு கடித்தது

உத்தரபிரதேச மாநிலம் பவானிப்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அரவிந்த்(வயது 38). இவரை கடந்த செவ்வாய்க்கிழமை பாம்பு ஒன்று கடித்தது. இதி்ல் அவர் பரிதாபமாக இறந்தார்.

அவரது இறுதி சடங்கு புதன்கிழமை நடந்தது. இதில் பங்கேற்பதற்காக அரவிந்தின் தம்பி . கோவிந்த் மிசாரா(22) சொந்த ஊருக்கு வந்தார். அவர் இறுதிச்சடங்கில் பங்கேற்றுவிட்டு தன்னுடைய வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தார். அப்போது கோவிந்த் மிசாராவையும் பாம்பு கடித்ததில் அவர் சம்பவம் இடத்திலேயே பலியானார்.

மேலும் அவருடன் வீட்டில் தங்கி இருந்த அவருடைய உறவுக்காரர் சந்திரசேக என்பவரையும் பாம்பு கடித்து விட்டு சென்றது. ஆனால் அதிர்ஷ்டவசமாக அவர் உயிர் பிழைத்துக் கொண்டார். அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதனை அடுத்து, மருத்துவ மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் அந்த கிராமத்திற்கு சென்று ஆய்வு செய்தனர். மேலும், உள்ளூர் எம்எல்ஏ கைலாஷ் சுக்லாவும் அவர்களது குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு ஆறுதல் கூறினார். இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருவதாக அவர் கூறினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.