June 16, 2026

Seithi Saral

Tamil News Channel

இந்தியாவில் புதிதாக 20,551 பேருக்கு கொரோனா

1 min read

20,551 new corona cases in India

5.8.2022
இந்தியாவில் 20 ஆயிரத்து 551 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

இந்தியாவில் கொரோனா

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்பான விவரத்தை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று காலை வெளியிட்டது. அதன் விவரம் வருமாறு:-
இந்தியாவில் இன்று காலைவரை கடந்த 24 மணி நேரத்தில் 20 ஆயிரத்து 551 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது புதன்கிழமை பாதிப்பான 17 ஆயிரத்து 135 மற்றும் வியாழக்கிழமை பாதிப்பான 19 ஆயிரத்து 893ஐ விட அதிகமாகும்.
இதனால், நாட்டில் இதுவரை கொரோனாவால் பாதிக்கபட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 41 லட்சத்து 7 ஆயிரத்து 588 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 34 லட்சத்து 45 ஆயிரத்து 624 ஆக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 1 லட்சத்து 35 ஆயிரத்து 364 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

70 பேர் சாவு

கொரோனா தாக்குதலுக்கு இன்று காலைவரை கடந்த 24 மணி நேரத்தில் 70 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 26 ஆயிரத்து 600 ஆக அதிகரித்துள்ளது. அதேவேளை நாடு முழுவதும் இதுவரை 205 கோடியே 59 லட்சத்து 47 ஆயிரத்து 243 தடுப்பூசி டோஸ்கள் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *