தடுப்பூசியை தீவிரப்படுது்த தமிழகம் உள்பட 7 மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுரை
1 min read
Central government advises 7 states including Tamil Nadu to intensify vaccination
6.8.2022
பண்டிகை காலம் நெருங்கி வருவதால் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என தமிழகம் உள்பட 7 மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுரை விடுத்துள்ளது.
தடுப்பூசி
டெல்லி, கேரளா, கர்நாடகா, மராட்டியம் ஒடிசா, தமிழகம் மற்றும் தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா பரவலை கருத்தில் கொண்டு அம்மாநில சுகாதாரத்துறை செயலாளர்களுக்கு மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் கடிதம் எழுதியுள்ளார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-
தகுதியுள்ள மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்த வேண்டும். அதனுடன் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றுவதுடன், வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும். பண்டிகை காலம் நெருங்கி வருவதால் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறப்பட்டு உள்ளது.