June 5, 2026

Seithi Saral

Tamil News Channel

இந்தியாவில் புதிதாக 16,561 பேருக்கு கொரோனா

1 min read

16,561 new corona cases in India

12.8.2022
இந்தியாவில் ஒரே நாளில் புதிதாக 16,561 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டது.

இந்தியாவில் கொரோனா

இந்தியாவில் இன்று ஒரே நாளில் 16 ஆயிரத்து 561 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கடந்த வியாழக்கிழமை 16,299 ஆக இருந்த கொரோனா பாதிப்பு, சேற்று 16,561 ஆக அதிகரித்தது. ஒரே நாளில் 18,053 பேர் குணமடைந்ததால் இந்தியாவில் டிஸ்சார்ஜ் ஆனவர்களின் எண்ணிக்கை 4,35,73,094 ஆனது.நாடு முழுவதும் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 1,25,076 லிருந்து 1,23,535 ஆக குறைந்துள்ளது.

49 பேர் சாவு

கொரோனா தொற்றால் வியாழக்கிழமை உயிரிழந்தோர் எண்ணிக்கை 53 ஆக பதிவானது. இந்தநிலையில், இன்று ஒரே நாளில் 49 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை கொரோனாவுக்கு மொத்தம் 5 லட்சத்து 26 ஆயிரத்து 928 பேர் இறந்துள்ளனர். நாடு முழுவதும் தடுப்பூசி செலுத்தியவர்களின் எண்ணிக்கை 2,07,47,19,034 ஆக அதிகரித்துள்ளது.
கடந்த வியாழக்கிழமை மட்டும் 17,72,441 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
மேற்கண்ட தகவலை மத்திய சுகாதார அமைச்சகம் இந்த தகவல்களை தெரிவித்துள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *