டாக்டரை அடித்த மகளுக்காக மிசோரம் முதல் மந்திரி மன்னிப்பு கேட்டார்
1 min read
Mizoram Chief Minister Apologizes For Daughter Beating Doctor
21.8.2022
டாக்டர் ஒருவரை மகள் அடித்ததற்காக மிசோரம் முதல் மந்திரி பகிரங்க மன்னிப்பு கோரினார்.
முதல்மந்திரி மகள்
மிசோரம் மாநில முதல் மந்திரியாக இருப்பவர் ஜோரம்தங்கா. இவர் மிசோ தேசிய முன்னணி கட்சியின் தலைவராகவும் இருக்கிறார். முதல் மந்திரியின் மகள் மிலாரி சாங்டே, மாநில தலைநகர் ஐஸ்வாலில் உள்ள ஒரு மருத்துவமனையை சேர்ந்த தோல் மருத்துவ நிபுணரிடம் மருத்துவ பரிசோதனைக்காக சென்றுள்ளார். முன் அனுமதி இல் லாததால் மருத்துவர் முதல் மந்திரியின் மகளை சந்திக்க மறுத்துள்ளார். இதையடுத்து கோபம் அடைந்த முதல் மந்திரி மகள் மருத்துவரின் முகத்தில் தாக்கியுள்ளார்.
இதனை அங்கு இருந்த ஒருவர் செல்போனில் வீடியோ பதிவு செய்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானதை அடுத்து முதல் மந்திரி மற்றும் மகள் மீது விமர்சனங்கள் எழுந்தன. இதையடுத்து முதல் மந்திரி ஜோரம்தங்கா தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரங்க மன்னிப்பு கோரினார். இது தொடர்பாக அவர் தனது பதிவில், ஐஸ்வாலை சேர்ந்த தோல் மருத்துவரிடம் தனது மகள் தவறாக நடந்ததற்கு மன்னிப்பு கேட்பதாகவும், அவரது நடத்தையை எந்த வகையிலும் நியாயப்படுத்த மாட்டோம் என்றும் தெரிவித்துள்ளார்.