கர்நாடக முதல்வராக பதவியேற்றார் டி.கே.சிவக்குமார்
1 min read
D.K. Shivakumar sworn in as Karnataka Chief Minister
3/6/2026
கர்நாடகாவின் புதிய முதல்வராக டி.கே.சிவக்குமார் இன்று பதவியேற்றுக் கொண்டார்.
கர்நாடகாவின் முதல்வராக இருந்த சித்தராமையா பதவியை ராஜினாமா செய்தார். இதனையடுத்து புதிய முதல்வராக டி.கே.சிவக்குமார் தேர்வு செய்யப்பட்டார்.
இன்று கர்நாடக கவர்னர் மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில் டி.கே.சிவக்குமார் முதல்வராக பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு கவர்னர் தாவர்சந்த் கெலாட் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
இந்த விழாவில், காங்கிரஸ் தலைவர் கார்கே, எதிர்க்கட்சி தலைவர் ராகுல், பொதுச்செயலாளர் வேணுகோபால், கேரள முதல்வர் சதீஷன், ஹிமாச்சல பிரதேச முதல்வர் சுக்வீந்தர் சுக்கு, முன்னாள் முதல்வர் சித்தராமையா மற்றும் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் இந்த விழாவில் பங்கேற்றார்.
முன்னதாக, இன்று காலை டி.கே.சிவக்குமார், பாஜ மூத்த தலைவர் எடியூரப்பா மற்றும் சித்தராமையாவை நேரில் சந்தித்தார்.