உ.பி.யில் வெயில்: 5 நாட்களில் 8,056 பேர் பலி
1 min read
Heatwave in UP: 8,056 people died in 5 days
3/6/2026
உத்தரபிரதேசத்தில் நிலவும் அதிகபட்ச வெப்பநிலையால், 5 நாட்களில் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்த அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இது தொடர்பாக நடத்தப்பட்ட ஒரு புதிய ஆய்வின்படி, வெப்பம் சார்ந்த மரணங்களில் இந்தியாவின் மிக ஆபத்தான பகுதியாக உத்தரப் பிரதேசம் உருவெடுத்துள்ளது. அதிகரித்து வரும் வெப்பநிலையும், பருவநிலை மாற்றமும், தீவிர வெப்ப நிகழ்வுகளின் போது உத்தரப் பிரதேசம் மிக அதிகளவு மரணங்களைச் சந்திக்கும் அபாயத்தில் உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கின்றனர்.
உத்தரப் பிரதேசத்தில் 8,056 மரணங்கள் நிகழ்ந்துள்ளன. இரண்டாவது மிக மோசமாகப் பாதிக்கப்படக்கூடிய மாநிலமாக பீஹார் உள்ளது. அங்கு உத்தேச எண்ணிக்கையாக சுமார் 3,615 மரணங்கள் நிகழ்ந்துள்ளன. இதற்கு அடுத்தபடியாக மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்கள் முறையே 2,964 மற்றும் 2,664 உத்தேச மரணங்களுடன் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
உத்தரப் பிரதேசம் இந்தியாவின் மிக அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலமாகும். சாதாரண சூழ்நிலைகளிலேயே இங்கு தினசரி மரணங்களின் அடிப்படை எண்ணிக்கை அதிகமாக உள்ளது. அதோடு இங்கு கோடைகால வெப்பநிலையும் மிகத் தீவிரமாக இருக்கிறது. எனவே பலி எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது.
பிரயாக்ராஜ், லக்னோ, கான்பூர் நகர், அசம்கர், ஆக்ரா மற்றும் பரேலி போன்ற உத்தரப் பிரதேச மாவட்டங்கள், இந்தியாவின் மிக அதிக வெப்ப பாதிப்புக்குள்ளாகும் மாவட்டங்களின் வரிசையில் இடம் பிடித்துள்ளன. இந்த ஒவ்வொரு மாவட்டங்களிலும், ஒரு ஐந்து நாள் வெப்ப அலையின் போது, 180க்கும் மேற்பட்ட கூடுதல் மரணங்களைப் பதிவு செய்யக்கூடும், எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வெயிலின் தாக்கத்தில் இருந்து தற்காத்துக் கொள்ள, பகல் 11 மணி முதல் மாலை 3 மணி வரையில் பொதுமக்கள் வெளியே செல்ல வேண்டாம் என்றும், அதிகளவு தண்ணீர் குடிக்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.