May 9, 2024

Seithi Saral

Tamil News Channel

மத்திய பிரதேசத்தில் இந்தி மொழியில் எம்பிபிஎஸ் படிப்பு-
நிபுணர்கள் கடும் எதிர்ப்பு

1 min read

Red Stethoscope in Shape of Heart Isolated On White Background.

MBBS Course in Hindi in Madhya Pradesh

28.8.2020
மத்தியப் பிரதேசத்தில் 2022-2023 கல்வி ஆண்டில் இருந்து இந்தியில் எம்பிபிஎஸ் படிப்பைத் தொடங்க அரசு புதிய முடிவை எடுத்துள்ளது. இதற்கு மருத்துவத்துறை நிபுணர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனா.

இந்தியல் எம்.பி.பி.எஸ்.

மத்தியப் பிரதேசத்தில் 2022-2023 கல்வி ஆண்டில் இருந்து இந்தியில் எம்பிபிஎஸ் படிப்பைத் தொடங்க மத்தியப் பிரதேச அரசு புதிய முடிவை எடுத்துள்ளது. ஆனால், தரமான புத்தகங்கள் கிடைக்காததால், மருத்துவத்துறையில் உள்ள வல்லுநர்கள் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
எம்பிபிஎஸ் படிப்பை இந்தியில் கற்பிப்பது நல்லது, ஆனால் தரமான பாடப்புத்தகங்கள் எங்கே? என்று மருத்துவ நிபுணர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். புதிய கல்வி ஆண்டு முதல், போபாலில் உள்ள காந்தி மருத்துவக் கல்லூரியில் (ஜிஎம்சி) எம்பிபிஎஸ் படிப்பு முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு இந்தியில் கற்பிக்கப்படும் என்று முதல் மந்திரி சிவராஜ் சிங் சவுகான் சமீபத்தில் அறிவித்தார்.
இந்த நடவடிக்கைக்கு உந்து சக்தியாக இருக்கும் மத்தியப் பிரதேச மாநில மருத்துவக் கல்வித்துறை மந்திரி விஸ்வாஸ் சாரங் இது குறித்து கூறுகையில், “தற்போது மருத்துவக் கல்வி ஆங்கிலத்தில் மட்டுமே கற்பிக்கப்படுகிறது. ஆனால், நாட்டிலேயே முதல் மாநிலமாக எம்.பி.பி.எஸ்., பாடத்தை இந்தியில் கற்பிக்கும் முயற்சி மத்தியப் பிரதேசத்தில் மட்டுமே உள்ளது. வேறு எந்த மாநிலமும் தாய்மொழியில் மருத்துவக் கல்வியை வழங்குவதில்லை. குறிப்பாக உடலியல், உடற்கூறியல் மற்றும் உயிர் வேதியியல் பாடப்புத்தகங்கள் மாணவர்களுக்காக இந்தியில் தயாரிக்கப்பட்டு அவை விரைவில் கிடைக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்தூர் தேவி அஹில்யாபாய் விஸ்வ வித்யாலயாவின் முன்னாள் துணைவேந்தரும் மூத்த குழந்தைகள் நல மருத்துவருமான டாக்டர் பாரத் சாபர்வால் கூறியதாவது:-
இந்தியில் மருத்துவக் கல்வியை வழங்குவதை நான் எதிர்க்கவில்லை, ஆனால் மருத்துவத் துறையில் மேம்படுத்தப்பட்ட தரமான பாடப்புத்தகங்கள் மாணவர்களுக்குக் கிடைக்குமா? அரசாங்கங்கள் எந்த மொழியில் மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை கற்பிக்கப்பட வேண்டும் என்பதை முடிவு செய்வதற்குப் பதிலாக இந்த பிரச்சினையை நிபுணர்களிடம் விட்டுவிட வேண்டும். ஒரு மருத்துவ நிபுணராக அரசு இந்த முடிவை அறிவிப்பதற்கு முன் போதிய ஏற்பாடுகள் செய்யப்படவில்லை என்று உணர்கிறோம்.
ஜப்பான், ரஷியா, சீனா, பிரான்ஸ் போன்ற நாடுகளில் தாய்மொழியில் மருத்துவக் கல்வி கற்பிக்கப்படுகிறது.இந்த நாடுகளில் போதுமான எண்ணிக்கையிலான தரமான பாடப்புத்தகங்கள் அவர்களின் தாய்மொழியில் கிடைக்கின்றன, இது இந்தியாவில் இல்லை.
மாநிலத்தில் இந்தி பல்கலைக்கழகத்தை உருவாக்கி, எம்பிபிஎஸ் பாடப்புத்தகங்களை இந்தி மொழியில் தயாரிக்க அரசு பணித்துள்ளது, ஆனால் இது மாணவர்களுக்கு பயனளிக்காது. இவ்வாறு அவர் தெரிவித்தார். இருப்பினும், மூத்த பாஜக தலைவரும், மருத்துவருமான டாக்டர் ஹிதேஷ் பாஜ்பாய் அரசின் இந்த நடவடிக்கையை ஆதரித்தார். அவர் கூறுகையில், “எம்பிபிஎஸ் படிப்பை இந்தியில் படிப்பவர்கள், படிப்பை முடித்த பிறகு எந்த வகையிலும் பின்தங்காமல் இருக்க பாடப் புத்தகங்களைத் தயாரித்து வருகிறோம். எம்.பி.பி.எஸ். இந்தியில் படிப்பவர்கள், ஆங்கிலத்திலும், இந்தியிலும் அனைத்து தொழில்நுட்ப மற்றும் மருத்துவச் சொற்களையும் கற்றுக்கொள்வதால், அவர்கள் பின்தங்க வாய்ப்பில்லை” என்றார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.