May 8, 2024

Seithi Saral

Tamil News Channel

நொய்டா இரட்டை கோபுரம் சில நொடிகளில் தரைமட்டமானது

1 min read

The Noida Twin Towers collapsed within seconds

28.8.2022
நொய்டாவில் விதி மீறி கட்டப்பட்ட இரட்டை கோபுரம் சில நொடிகளில் தரைமட்டமாக்கப்பட்டது. கட்டிடம் தகர்க்கப்பட்டதால் அப்பகுதி மூலமாக புகை மண்டலம் போல காட்சியளித்தது.

இரட்டை கோபுரம்‘

உத்தரப் பிரதேசத்தில் உள்ள நொய்டாவில் சூப்பர்டெக் என்ற ரியல் எஸ்டேட் நிறுவனம் 40 அடுக்குமாடி குடியிருப்புகள் கொண்ட இரட்டை கோபுரத்தை கட்டியுள்ளது. சுமார் 7,000 பேர் தங்கும் வசதி கொண்ட இந்த குடியிருப்பில் இதுவரை யாரும் குடியேறவில்லை. ஒரு டவரில் 32 தளங்களும் மற்றொரு டவரில் 29 டவர்களும் உள்ளன.
இந்த கட்டுமானமானது விதிகளுக்கு புறம்பானது என புகார் எழுந்தது. இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்ற விசாரணைக்கு வந்த நிலையில், கடந்தாண்டு கட்டடங்களை வெடி வைத்து தகர்க்க சுப்ரீம் உத்தரவிட்டது.

வெளியேற்றம்

இதை வெடிவைத்து தகர்க்கும் பணி எடிபைஸ் இன்ஜினியரிங் என்ற தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது. அதன்படி 28-ம் தேதி (இனறு) மதியம் 2.30 மணிக்கு இரட்டை கோபுர கட்டடம் இடிக்கப்படவுள்ளன. இரட்டைக் கோபுர தகர்ப்புக்கான முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இரட்டை கோபுர கட்டடத்தின் அருகே உள்ள 5000க்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற்றப்பட்டனர். மேலும் அப்பகுதியில் இருந்த சுமார் 1,500 வாகனங்கள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளன. இரட்டை கோபுர தகர்ப்பையொட்டி இன்று நொய்டாவில் குறிப்பிட்ட பகுதியில் ‘டிரோன்கள்’ பறக்க தடைவிதிக்கப்பட்டன. தகர்ப்பு வேளையில் 1 நாட்டிகல் மைல் தூரத்துக்கு வான்வெளியில் விமானம் பறப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் பாதுகாப்பு பணியில் சுமார் 560 போலீசார், 100 ரிசர்வ் படைகள், 4 என்டிஆர்எஃப் குழு ஈடுபடுத்தப்பட்டுள்ளன. கட்டடத்தை இடிப்பதற்காக சுமார் 37,000 கிலோ வெடிபொருள்கள் பயன்படுத்தப்பட்டன.

தரைமட்டமானது

இந்த கட்டிடங்கள் வெடி வைத்து தகர்க்கப்பட்ட சில வினாடிகளில் தரைமட்டமாகியது. கட்டிட இடிபாடுகளால் எழுந்த புழுதியால் அப்பகுதி முழுவதும் புகை மூட்டம் போல துசுபடலமாக காட்சியளித்தது. இரட்டை கோபுரத்தின் கட்டுமான சேதங்களை எடுத்துச் செல்ல 1200 டிப்பர் லாரிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இந்த கட்டுமானத்தின் மதிப்பீடு சுமார் 300 கோடி ரூபாய் எனக் கணக்கிடப்பட்டுள்ள நிலையில், வெடிபொருள் வைத்து தகர்த்தால் இது 9 நொடியில் தூள்தூளாக தரைமட்டமானது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.