April 27, 2024

Seithi Saral

Tamil News Channel

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 5,439 பேராக குறைந்தது

1 min read

Daily corona cases in India reduced to 5,439

30.8.2022
இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 5,439 பேராக குறைந்தது.

இந்தியாவில் கொரோனா

இந்தியாவில் இன்றைய கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது. புதுடெல்லி, இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்பான விவரத்தை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று காலை வெளியிட்டது. அதன்விவரம் வருமாறு:-

இந்தியாவில் இன்று காலை வரை கடந்த 24 மணி நேரத்தில் 5 ஆயிரத்து 439 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது நேற்றைய பாதிப்பான 5 ஆயிரத்து 591-ஐ விட குறைவாகும்.
இதனால், நாட்டில் இதுவரை கொரோனாவால் பாதிக்கபட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 44 லட்சத்து 21 ஆயிரத்து 162 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 38 லட்சத்து 25 ஆயிரத்து 24 ஆக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 65 ஆயிரத்து 732 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அதேவேளை நாடு முழுவதும் இதுவரை 212.71 கோடி தடுப்பூசி டோஸ்கள் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.