சென்னையில் விசாரணைக்கு சென்ற போலீஸ்காரரை கடித்து குதறிய பெண்
1 min read
A woman bit a policeman who went to investigate in Chennai
1.9.2022
காதலன் வீட்டில் தகராறு செய்த பெண் விசாரணைக்கு சென்ற போலீஸ்காரரை கடித்து வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
காதலன்
சென்னை வண்ணாரபேட்டையை சேர்ந்தவர் செல்வி. இவர் திருவெற்றியூரைச் சேர்ந்த ரேவேந்திர குமார் என்பவரை காதலித்து வந்தார். கடந்த 2 வருடங்களுக்கு முன் இருவரும் நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர். அதில் இருந்து செல்வி ரேவேந்திர குமாரிடம் பணம் நகை கேட்டு தொந்தரவு செய்து வந்துளாதாக கூறப்படுகிறது.
இதனால் ரேவேந்திர குமார் வீட்டில் இவர்களது திருமணத்திற்கு ஒத்துக்கொள்ளவில்லை. இதனால் கோபம் அடைந்த செல்வி திருவெற்றியூரில் உள்ள காதலன் வீட்டிற்கு அடிக்கடி சென்று தகராறு செய்து வந்தார். நேற்றும் இது போல் அவர் சென்று தகராறில் ஈடுபட்டார்.
கடித்தார்
அப்போது ரேவேந்திர குமார் வீட்டில் போலீசுக்கு தகவல் கொடுத்து உள்ளனர். அங்குவந்த போலீசாருடன் செல்வி தகராறில் ஈடுபட்டு உள்ளார் போலீஸ்காரரின் சட்டையை பிடித்து தாக்கி உள்ளார். அவரின் கையை கடித்து வைத்து உள்ளார். ஒருவழியாக போலீசார் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.