June 4, 2026

Seithi Saral

Tamil News Channel

காவிரி தண்ணீா 1 லட்சம் கன அடி கடலில் கலக்கிறது

1 min read

Cauvery discharges 1 lakh cubic feet into the sea

9.9.2022
காவிரி தண்ணீா 1 லட்சம் கன அடி கடலில் கலக்கிறது. கொள்ளிடம் ஆற்றின் கரையோர கிராமங்களை தண்ணீர் சூழ்ந்துள்ளதால் அங்குள்ள மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
காவிரி தண்ணீர்

மயிலாடுதுறை, மேட்டூர் அணையில் இருந்து காவிரியில் 1 லட்சத்து 25 ஆயிரத்து 400 கன அடி நீர் வெளியேற்றப்பட்டுள்ள நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கொள்ளிடம் ஆற்றில் வெளியேற்றப்படும் உபநீரின் அளவும் படிப்படியாக உயர்த்தப்பட்டு வருகிறது. இதனால் நேற்று மாலை 1 லட்சம் கன அடிக்கு மேல் கொள்ளிடம் ஆற்றின் வழியாக தண்ணீர் கடந்து சென்று வங்க கடலில் கலக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், கரையோர கிராமங்களை தண்ணீர் சூழ்ந்துள்ளதால் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இன்றைய நிலவரப்படி 1 லட்சத்து 20 ஆயிரம் கனஅடி தண்ணீர் கொள்ளிடம் ஆற்றில் செல்வதால், கரையோரம் அமைந்துள்ள முதலைமேடு திட்டு, நாதல்படுகை, வெள்ளை மணல், கோரை திட்டு உள்ளிட்ட கிராமங்கள் வெள்ளநீரால் சூழப்பட்டுள்ளன. இதனால் அங்குள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *