June 22, 2026

Seithi Saral

Tamil News Channel

துறைமுகம் மசோதாவால் மாநில உரிமைக்கு பாதிப்பு : மு.க.ஸ்டாலின் பிரதமருக்கு கடிதம்

1 min read

Harm to state ownership by port bill: M.K.Stalin’s letter to Prime Minister

22.9.2022
சென்னை: இந்திய துறைமுக மசோதா 2022ல் மாநில அரசின் உரிமைகளை பறிக்கும் பிரிவுகளை நீக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
இந்திய துறைமுகங்கள் மசோதா 2022 தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில், இந்திய துறைமுகங்கள் மசோதா 2022ல் மாநில அரசின் உரிமைகளை பாதிக்கும் பிரிவுகளை அகற்றிட வேண்டும் என்றும், கடலோர மாநிலங்களின் உரிமைகள், சிறு துறைமுகங்களின் எதிர்கால வளர்ச்சியை தடுக்கும் வகையில் மசோதா உள்ளதாக தெரிவித்துள்ளார்.
அதேபோல் மாநில உரிமைகளை பாதிக்கும் வகையில் வரைவு சட்டத்தில் இடம்பெற்றுள்ள பிரிவுகளை அகற்ற வேண்டும் எனவும் பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *