May 20, 2024

Seithi Saral

Tamil News Channel

வாட்ஸ்-அப் மூலம் ரெயில் பயண தகவல்களை அறியலாம்

1 min read

You can know train travel information through WhatsApp

28.9.2022
ஐஆர்சிடிசி பயணிகள் தங்களின் பிஎன்ஆர் நிலையை வாட்ஸ்அப் மூலமாக அறிந்து கொள்ளும் புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

ரெயில் பயணம்

குறைவான கட்டண விலை, பாதுகாப்பான பயணம் ஆகிய பல்வேறு காரணங்களுக்காக இந்தியாவில் இருக்கும் பெரும்பாலான மக்கள் தங்களின் தொலைதூர பிராயணத்திற்கு ரெயில் பயணத்தை நாடுகின்றனர். அப்படி ரெயிலில் பயணம் செய்யும் பயணிகளின் வசதிக்காக இந்திய ரயில்வே பல்வேறு வசதிகளை அறிமுகம் செய்து வருகிறது.
குறிப்பாக நீண்ட வரிசையில் இன்று காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லாமல் போன் மூலமாகவே டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளும் வசதியும் தற்போது உள்ளது.

வாட்ஸ் அப்

இந்நிலையில் ஐஆர்சிடிசி பயணிகள் தங்களது தேவையான பிஎன்ஆர் ஸ்டேட்டஸ், ரெயில் இருக்கும் இடம், நேரம் உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் வாட்ஸ்அப் மூலமாக பார்த்துக் கொள்ளும் புதிய வசதியை கொண்டு வந்துள்ளது மும்பையை சேர்ந்த ‘railofy’ என்ற நிறுவனம். இதுவரை இத்தகைய தகவல்களுக்காக பயணிகள் பல்வேறு செயலிகளை பயன்படுத்தி வந்த நிலையில் தற்போது கொண்டு வந்துள்ள இந்த முன்னெடுப்பு மக்களிடையே கவனம் பெற்றுள்ளது.
இதை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்த தகவல் பின்வருமாறு:-
★ பயணிகள் முதலில் ‘railofy’ நிறுவனத்தின் வாட்ஸ்அப் சாட்பாட் எண்ணான +91-9881193322 என்ற எண்ணை தங்கள் போனில் சேமிக்க வேண்டும்.
★ பின்னர் அதனை வாட்ஸ்அப் சாட்டில் ஓபன் செய்ய வேண்டும்.
★ அதில் பயணிகள் தங்களது பிஎன்ஆர் எண்ணை உள்ளிட வேண்டும். அப்படி செய்தால் பயணிகளுக்கு வாட்ஸ் அப்பில் அவர்கள் பயணித்துக் கொண்டிருக்கும் ரயில் தகவல்கள் கிடைக்கும்.
★ பயணத்திற்கு முன்னதாக பயணிகள் இதில் பிஎன்ஆர் எண்ணை பகிர்வதன் மூலம் ரயில் குறித்த ரியல் டைம் ஸ்டேட்டஸை அறிந்து கொள்ள முடியும். அதாவது பயண நேர மாற்றம் குறித்த அப்டேட் தொடங்கி அனைத்தும் இதில் அடங்கும்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.