May 30, 2024

Seithi Saral

Tamil News Channel

இந்தியாவிற்கு கொண்டு வரப்பட்ட 8 சிறுத்தைகளுக்கு 1,900 பெயர்கள் பரிந்துரை

1 min read

1,900 names suggested for 8 leopards brought to India

29.9.2022-
இந்தியாவிற்கு கொண்டு வரப்பட்ட 8 சிறுத்தைகளுக்கு 1,900 பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது.

சிறுத்தைகள்

பிரதமர் மோடியின் பிறந்தநாள் கடந்த 17-ந்தேதி கொண்டாடப்பட்டது. அதையொட்டி, நமீபியாவில் இருந்து 8 சிறுத்தைகள் விமானம் மூலம் வரவழைக்கப்பட்டிருந்தன. அந்த சிறுத்தைகளை மத்தியபிரதேச மாநிலம் குணோவில் உள்ள தேசிய வன உயிரியல் பூங்காவில் பிரதமர் மோடி திறந்துவிட்டார்.
நமது நாட்டில் அழிந்துபோன சிறுத்தை இனத்தை மீண்டும் அறிமுகப்படுத்துவதற்காக, ஆப்பிரிக்காவில் இருந்து ஐந்து ஆண் சிறுத்தை குட்டிகளும் மூன்று பெண் சிறுத்தை குட்டிகளும் இந்தியாவிற்கு கொண்டு வரப்பட்டுள்ளன. இந்த சிறுத்தைகளுக்கு புதிய பெயர்களை பரிந்துரை செய்யுமாறு நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி கேட்டுக் கொண்டார். பிரதமரின் வேண்டுகோளை ஏற்று, மத்திய அரசின் இணையதளத்தில் ஏராளமான மக்கள் தங்கள் பரிந்துரைகளை வழங்கி வருகின்றனர். அதன்படி அசோகா, சந்திரகுப்தா, விக்கிரமாதித்யா, பிரித்விராஜ், லஷ்மி பாய், மில்கா சிங், சிம்பா, தேஜஸ், ருத்ரா, வித்யூத், இந்திராணி, சக்தி, கங்கா, காவேரி உள்ளிட்ட பழங்கால அரசர்கள், அரசிகள், விளையாட்டு வீரர்கள், நதிகள் என சுமார் 1,900 பெயர் பரிந்துரைகள் வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.