May 20, 2024

Seithi Saral

Tamil News Channel

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 4,272 பேராக குறைவு

1 min read

Daily corona cases in India decrease to 4,272

29.9.2022
இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 4,272 பேராக குறைந்தது.

இந்தியாவில் கொரோனா

இந்தியாவில்இன்றும் தொடர்ந்து 2-வது நாளாக தினசரி கொரோனா பாதிப்பு 4 ஆயிரத்துக்கு கீழே பதிவானது. இந்தியாவில்இன்று காலைவரை கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 4,272 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுவரை கொரோனா தொற்று 4 கோடியே 45 லட்சத்து 83 ஆயிரத்து 360 பேரை பாதித்துள்ளது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த 4,474 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். 40,750 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
இதுவரையில் 4 கோடியே 40 லட்சத்து13 ஆயிரத்து 999 பேர் கொரோனாவில் இருந்து குணம் அடைந்துள்ளனர்.

27 பேர் சாவு

நாட்டில் கடந்த புதன்கிழமை கொரோனா தொற்றால் 22 பேர் பலியாகினர்.இன்று இந்த எண்ணிக்கை சற்று அதிகரித்து 27ஆக அதிகரித்தது. இதுவரை இந்த தொற்றால் பலியானோர் எண்ணிக்கை 5 லட்சத்து 28 ஆயிரத்து 611 ஆக உயர்ந்தது. நாடு முழுவதும் தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களின் எண்ணிக்கை 21 கோடி 81 லட்சம் ஆகும்இன்று ஒரே நாளில் 21,63,248 பேர் தடுப்பூசி செலுத்திக்கொண்டனர். இந்த புள்ளிவிவரங்களை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.