ஜம்மு-காஷ்மீரை நாட்டிலேயே மிகவும் அமைதியான இடமாக மாற்ற விரும்புகிறோம்- அமித்ஷா தகவல்
1 min read
We want to make Jammu and Kashmir the most peaceful place in the country – Amit Shah informs
5.10.2022
ஜம்மு-காஷ்மீரை நாட்டிலேயே மிகவும் அமைதியான இடமாக மாற்ற விரும்புகிறோம் என்று அமித்ஷா கூறினார்.
அமித்ஷா
ஜம்மு மற்றும் காஷ்மீரில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா 3 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இதன் நிறைவு நாளான இன்று பாராமுல்லா மாவட்டத்தில் பேரணி ஒன்றில் கலந்து கொண்டு அவர் உரையாற்றினார். அப்போது பேசிய அமித்ஷா, நரேந்திர மோடி அரசாங்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதத்தை ஒழிக்க விரும்புவதாக தெரிவித்தார். இந்த பேரணியில் அவர் மேலும் பேசியதாவது:-
நாங்கள் பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று சிலர் கூறுகிறார்கள். நாங்கள் ஏன் பாகிஸ்தானுடன் பேச வேண்டும்? நாங்கள் பாகிஸ்தானுடன் பேச மாட்டோம்.
பாரமுல்லா மக்களுடன் பேசுவோம். காஷ்மீர் மக்களுடன் பேசுவோம். நரேந்திர மோடி அரசாங்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதத்தை ஒழிக்க விரும்புகிறது. அதனால் ஜம்மு மற்றும் காஷ்மீர் இந்தியாவின் சொர்க்கமாக இருக்கும்.
அமைதியான மாற்றம்
நாங்கள் பயங்கரவாதத்தை சகித்துக் கொள்ள மாட்டோம். ஜம்மு-காஷ்மீரை நாட்டிலேயே மிகவும் அமைதியான இடமாக மாற்ற விரும்புகிறோம்.